1620கள்
பத்தாண்டு
1620கள் (1620s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1620 ஆம் ஆண்டு துவங்கி 1629-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1620
- மே 17 - உலகின் முதலாவது குடைராட்டினம் துருக்கியில் காண்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17-அக்டோபர் 7 - செசோரா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுப் படையினர் போலந்து–மல்தாவியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- இங்கிலாந்தில் கடும் குளிர். தேம்சு ஆறு உறைந்தது. இசுக்காட்லாந்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாகப் பனிப் பெய்தது.[1]
- நவீன கால வயலின் வடிவமைக்கப்பட்டது.
- சூனியக்காரிகள் வேட்டை இசுக்கொட்லாந்தில் ஆரம்பமானது.
1621
- பெப்ரவரி 9 - பதினைந்தாம் கிரகோரி 234வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- மார்ச் 31 - எசுப்பானியாவின் நான்காம் பிலிப்பு தனது 44-ஆண்டு கால ஆட்சியை ஆரம்பித்தார்.
- ஏப்ரல் - டச்சுக் குடியரசுக்கும் எசுப்பானியப் பேரரசுக்கும் இடையே இருந்த 12-ஆண்டுக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் எண்பதாண்டுப் போரை மீளத் தொடங்க ஆயத்தங்கள் மேற்கொண்டன.
- சூன் 3 - டச்சு மேற்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- சூன் 21 - முப்பதாண்டுப் போர்: 27 செக் பிரபுக்கள் பிராகாவில் தூக்கிலிடப்பட்டனர்.
- அக்டோபர் 9 - உதுமானியப் பேரரசுக்கும் போலந்து-லுத்துவேனியாவிற்கும் இடையே இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது.
- டச்சு கணித, வானியலாளர் வெலிபுரோர்ட் சினெல் வான் ரோயன் பிரபலமான சினெல்லின் விதியைக் கண்டுபிடித்தார்.
- சாதிக்காய் வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தனது 2000 படையினரை இந்தோனேசியாவின் பாண்டா தீவுகளுக்கு அனுப்பியது.
- இலங்கை, வல்வெட்டித்துறையில் போர்த்துக்கீசருக்கும், தமிழருக்கும் இடையே சமர் இடம்பெற்றது.[2]
1622
- சனவரி 1 - கிரெகொரியின் நாட்காட்டியில் இந்நாள் ஆண்டின் முதலாம் நாளாக மார்ச் 25 இற்குப் பதிலாக அறிவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னன் ஆங்கிலேய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- மார்ச் 12 - லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், அவிலாவின் புனித தெரேசா, பிலிப்பு நேரி ஆகியோருக்கு திருத்தந்ததை பதினைந்தாம் கிரிகோரி அருளாளர் பட்டம் வழங்கினார்.
- மார்ச் 22 - ஜேம்சுடவுனில் அல்கோன்கியான் பூர்வகுடி மக்கள் 347 ஆங்கியேயக் குடியேறிகளைக் கொன்று என்றிக்கசு குடியேற்றத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அமெரிக்க-இந்தியப் போர் ஆரம்பமானது.
- மே 13 - ஆஸ்திரேலியாவில் தடம் பதித்த இரண்டாவது கப்பலான ஈன்டிராக்ட் என்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக் கப்பல் ஆம்போன் தீவில் தரை தட்டியது.
- சுப்பீரியர் ஏரியைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் எத்தியேன் புரூலே.
- பெரிய ஆல்பர்ட் அருளாளராகவும், அவிலாவின் புனித தெரேசா புனிதராகவும் அறிவிக்கப்பட்டனர்.
- மட்டக்களப்புக் கோட்டை கட்டுமானம் ஆரம்பமானது.
1623
- மார்ச் 9 - இந்தோனேசியாவின் அம்போனா தீவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பத்து பணியாளர்களை (ஒன்பது சப்பானியர்கள், ஒரு போர்த்துக்கீசர்) டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தூக்கிலிட்டனர்.
- சூலை - இங்கிலாந்தில் இருந்து மேலும் குடியேறிகளுடன் "புதிய பிளைமவுத்" குடியேற்றப்பகுதிக்கு வந்து சேர்ந்தது.
- ஆகத்து 6 - எட்டாம் அர்பன் 235வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 10 - நான்காம் முராட் (1623–1640) உதுமானியப் பேரரசர் ஆனார்.
- நவம்பர் 1 - அமெரிக்காவின் பிளைமவுத் குடியேற்றத் திட்டத்தில் இடம்பெற்ற தீயினால் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
- செயிண்ட் கிட்சும் நெவிசும் தீவில் இங்கிலாந்து முதற்தடவையாகக் குடியேற்றத்தை ஆரம்பித்தது..
- விலைம் சிக்கார்டு "கணக்கிடும் நேரகாட்டியை" வடிவமைத்தார். இது ஆரம்பகாலக் கணிப்பொறியாகும்.
- தொம்மாசோ கம்பனெல்லா சூரியனின் நகரம் என்ற மெய்யியல் ஆக்கத்தை வெளியிட்டார்.
- மதுரையில் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்து, திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் ஆரம்பமானது.
- திருகோணமலைக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.
1624
- சனவரி 14 - 90 ஆண்டுகளாக உதுமானியரின் பிடியில் இருந்த பக்தாத் நகரம் மீண்டும் சபாவிது பேரரசின் கீழ் வந்தது.
- மார்ட்டின் லூதரின் விவிலியத்தின் செருமானிய மொழிபெயர்ப்பு நூல் திருத்தந்தையின் உத்தரவில் பொதுமக்களின் முன்னிலையில் தீயிடப்பட்டது.
- நெதர்லாந்து சீனக் குடியரசில் தைனான் என்ற வணிகக் குடியேற்றத்தை நிறுவியது.
- நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் பெரும் தீ பரவியது.
- வெர்சாய் அரண்மனை பதின்மூன்றாம் லூயி மன்னனால் கட்டப்பட்டது.
- போர்த்துக்கீசர் யாழ்ப்பாண நகரில் கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தனர்.[2]
1625
- மார்ச் 27 - இங்கிலாந்தின் மன்னனாக முதலாம் சார்ல்ஸ் முடிசூடினான்.
- மே 15 - ஆஸ்திரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் 24 - டச்சு நாட்டவர் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரைத் தாக்கினர்.
- டிசம்பர் 9 - நெதர்லாந்தும் இங்கிலாந்தும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1626
- பெப்ரவரி 2 - முதலாம் சார்ல்சு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார். கத்தாலிக்கமல்லாத நிகழ்வில் பங்கு கொள்ள அவரது மனைவி என்றியெட்டா மரியா மறுத்துவிட்டார்.
- மே 24 - பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை பழங்குடியினரிடம் இருந்து 60 கில்டர்கள் ($24) மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்து விலைக்கு வாங்கினார்.
- சூன் 15 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முதலாம் சார்ல்சு மன்னர் கலைத்தார்.
- சூலை 30 - நாபொலி நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1627
- பெப்ரவரி 20 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பெரும் சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
- ஜூலை 4 - ஜூலை 19 - ஐஸ்லாந்து நாட்டை முஸ்லிம்கள் தாக்கினர்.
- ஜூலை 20 - ரே தீவை ஆங்கிலேயர் முற்றுகையிட்டனர். ஆனாலும் இது வெற்றி பெறவில்லை.
- ஜூலை 27 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
1628
- சனவரி 25 - ஷாஜகான் முகாலயப் பேரரசனாக ஆக்ராவில் முடிசூடினான்.
- மார்ச் 1 - இங்கிலாந்தில் உள்ள அனைத்து கவுன்டிகளும் கப்பல் வரி கட்ட வேண்டும் என சார்ல்சு மன்னர் ஆணையிட்டான்.
- ஆகத்து 23 - முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
- மட்டக்களப்புக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் கிறித்தவப் போதகர்கள் அந்தோனியோ பெச்சி, மத்தியூ பெர்னாண்டசு ஆகியோர் தியாக மரணமடைந்தனர்.[2]
1629
- மார்ச் 6 - 1552 முதல் சீர்திருத்தத் திருச்சபையிடம் இழக்கப்பட்ட அனைத்து கத்தோலிக்க உடமைகளும் மீட்கப்பட வேண்டும் என புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினண்டு உத்தரவிட்டார்.
- சூன் 4 - டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பட்டாவியா என்ற கப்பல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பீக்கன் தீவுக்கருகில் மூழ்கியது. கப்பலில் இருந்த இரண்டு நாடுகடத்தப்பட்ட கொலையாளிகள் ஆத்திரேலியாவில் கரையொதுங்கினர். இவர்களின் முடிவு இதுவரையில் அறியப்படவில்லை.[3]
- செப்டம்பர் 25 - சுவீடனும் போலந்தும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
நாட்டுத் தலைவர்கள்
தொகுமுகலாயப் பேரரசர்கள்
தொகுஇலங்கையின் போர்த்துக்கீச ஆளுனர்கள்
தொகு- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618-1622
- ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622-1623
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623-1630
இறப்புகள்
தொகு- 1625 - முத்துத் தாண்டவர்
- 1627 மார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்
- 1627 அக்டோபர் 28 - ஜஹாங்கீர், முகலாயப் பேரரசன் (பி. 1569)
மேற்கோள்கள்
தொகு- ↑ Stratton, J.M. (1969). Agricultural Records. John Baker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-212-97022-4.
- ↑ 2.0 2.1 2.2 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3
- ↑ Blainey, Geoffrey (1966). The Tyranny of Distance. Melbourne: Sun Books. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7251-0019-2.