1569
ஆண்டு
ஆண்டு 1569 (MDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1569 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1569 MDLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1600 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2322 |
அர்மீனிய நாட்காட்டி | 1018 ԹՎ ՌԺԸ |
சீன நாட்காட்டி | 4265-4266 |
எபிரேய நாட்காட்டி | 5328-5329 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1624-1625 1491-1492 4670-4671 |
இரானிய நாட்காட்டி | 947-948 |
இசுலாமிய நாட்காட்டி | 976 – 977 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 12 (永禄12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1819 |
யூலியன் நாட்காட்டி | 1569 MDLXIX |
கொரிய நாட்காட்டி | 3902 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 11–மே 6 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டுக் குலுக்கல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. பழைய புனித பவுல் பேராலயத்தில் இடம்பெற்றது. 10 சிலிங்குகள் பெறுமதியான இச்சீட்டுகளினால் கிடைக்கப்பெற்ற பணம் துறைமுகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.[1]
- சூலை 1 – போலந்து இராச்சியமும் லிதுவேனியாவும் ஒரு நாடாக போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என்ற பெயரில் இணைந்தன.
- நவம்பர்–டிசம்பர் – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை ஆட்சியில் இருந்து இறக்கி கத்தோலிக்கரான ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியை இங்கிலாந்தின் அரசியாக்க வடக்கின் மூன்று இளவரசர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மூவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
- அக்பர் பத்தேப்பூர் சிக்ரி என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரை அமைத்தார்.
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அரியநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது.
- அயூத்தியா அரசு பர்மாவிடம் தோற்றது.[2]:42–43
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 10 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)
- செப்டம்பர் 9 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525)
- கெம்பெ கவுடா, குறுநில மன்னர், பெங்களூருவின் நிறுவனர் (பி. 1510)