1525
ஆண்டு 1525 (MDXXV) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1525 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1525 MDXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1556 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2278 |
அர்மீனிய நாட்காட்டி | 974 ԹՎ ՋՀԴ |
சீன நாட்காட்டி | 4221-4222 |
எபிரேய நாட்காட்டி | 5284-5285 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1580-1581 1447-1448 4626-4627 |
இரானிய நாட்காட்டி | 903-904 |
இசுலாமிய நாட்காட்டி | 931 – 932 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 5 (大永5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1775 |
யூலியன் நாட்காட்டி | 1525 MDXXV |
கொரிய நாட்காட்டி | 3858 |
நிகழ்வுகள்
தொகு- பிப்ரவரி 28 – கடைசி அஸ்டெக் பேரரசான குயோடெமொச்வை, எர்னான் கோட்டெஸ்சால் கொல்லப்பட்டார்.
- மார்ச் 20 - மறுமலர்ச்சிக் காலத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள், என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. [1]
- மே 15 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.
- சூன் 13 - மார்ட்டின் லூதர் கத்தரீனா ஃபோன் போரா என்னும் கிறிஸ்துவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அதர்க்கு லூக்காஸ் கிரனாச் எல்டர் என்ற ஓவியர் ஒருவரே சாட்சிகள் ஆவர்.
- சூலை 29 - சாண்டா மார்த்தா, கொலொம்பியாவிலுள்ள முதல் நகரம் ஆகும். இதை எசுப்பானிய வெற்றியாளர் ரோட்ரிகோ டி பஸ்திதாஸ் என்பவர் மூலம் நிறுவப்பட்டது.
- டிசம்பர் 31 - தாமஸ் மோர், இங்கிலாந்து பேரரசின் லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர் பதவியில் இருந்தார்.
தேதி அறியப்படாதவை
தொகு- அரையாப்பு பிளேக்கு என்னும் கொடிய நோயானது தெற்குப் பிரான்சுப் பகுதியில் பரவியது.
- முதல் முதலில் பிரான்சு நாட்டுத் தூதுவர் இஸ்தான்புலுக்கு வருகைத்தந்தார்.
- பானிப்பட்டில் டில்லியின் இப்ராகிம் லோடி மன்னருக்கும், தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாம் பானிப்பட் போர் துவக்கம்.
- வில்லியம் டென்டல், புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பிறப்புகள்
தொகு- சனவரி 6 – காஸ்பர் பேயூசிர், செருமானிய சீர்திருத்தவாதி (இ. 1602)
- சனவரி 29 – லெலியோ சோழினி, மனித இன இயற்பண்பாய்வாளர் மற்றும் சீர்திருத்தவாதி (இ. 1562)
- பிப்ரவரி 5 – சூராஜ் டீரஸ்கொவிச், கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 1587)
- சூன் 29 – பீட்டர் அகிரிகோலா, செருமானிய மறுமலர்ச்சி மனித இன இயற்பண்பாய்வாளர், பயிற்றுநர், மரபார்ந்த அறிஞர், இறைமையியல் வல்லுநர், தூதர், ராஜதந்திரி (இ. 1585)
- செப்டம்பர் 1 – கிறிஸ்டோபர் வால்கென்டொர்ப், டென்மார்க் நாட்டு அரசியல்வாதி (இ. 1601)
- செப்டம்பர் 11 – ஜான் ஜார்ஜ், பிரான்டென்போர்க் வாக்காளர் குழு (இ. 1598)
- செப்டம்பர் 25 – ஸ்டீவன் பரோ, இங்கிலாந்து தேடலாய்வாளர், கப்பலோட்டி (இ. 1584)
- பீட்டர் புரூகல் - டச்சு மறுமலர்ச்சி ஓவியர் (இ 1569)
- எட்வர்ட் சட்டன், 4வது டுட்லி பிரபு, ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1586)
- கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா - இத்தாலிய சமயசார்பு மறுமலர்ச்சி இசைத் தொகுப்பாளர் (இ, 1594)
- முத்துத் தாண்டவர் - கருநாடக இசைப் பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி (இ, 1625)
இறப்புகள்
தொகு- சனவரி 24 – பிரான்சியாபிகியோ, புளோரென்டினே ஓவியர் (பி. 1482)
- பிப்ரவரி 24 - குல்லாயுமி கோயுப்யிர், செகனேயூர் டெ போன்னிவெட், பிரான்சு படைவீரன் (பி. 1488)
- மே 27 – தாமஸ் முயின்டிசர், ஜெர்மனிய கிறித்தவப் பாதிரியார் மற்றும் போராளித் தலைவர் (பி. 1489)
- . டிசம்பர் 30 – ஜேக்கப் ஃபூக்கெர், ஜெர்மன் வங்கித்தொழிலர் (பி. 1459)
1525 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Peter Blickle: Die Geschichte der Stadt Memmingen, von den Anfängen bis zum Ende der Reichsstadtzeit, Stuttgart 1997, S. 393.