சூன் 22
நாள்
(ஜூன் 22 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 22 (June 22) கிரிகோரியன் ஆண்டின் 173 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 174 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 192 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது.
- 813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார்.
- 1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர்.
- 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- 1658 – மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.[1][2]
- 1774 – வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர்.
- 1783 – ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது.
- 1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது.
- 1893 – அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
- 1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
- 1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
- 1918 – அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
- 1921 – எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.[3]
- 1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
- 1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1948 – 802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.[4]
- 1957 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- 1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
- 2002 – ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
- 2009 – வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1805 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872)
- 1856 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய புதின எழுத்தாளர் (இ. 1925)
- 1864 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, செருமானியக் கணிதவியலாளர் (இ. 1909)
- 1892 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (இ. 1951)
- 1898 – சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 1975)
- 1912 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழகக் கடம் கலைஞர் (இ. 1975)
- 1927 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2011)
- 1932 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (இ. 2005)
- 1940 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1944 – எ. சிட்னி சுதந்திரன், தமிழக எழுத்தாளர்.
- 1949 – மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க நடிகை, பாடகி
- 1949 – எலிசபத் வொரன், அமெரிக்க அரசியல்வாதி
- 1964 – டான் பிரவுன், அமெரிக்க எழுத்தாளர்
- 1974 – எலன் ஜோ காக்சு, பிரித்தானிய அரசியல்வாதி (இ. 2016)
- 1974 – விஜய், இந்திய நடிகர்
- 1974 – தேவயானி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1984 – யான்கோ டிப்சாரெவிச், செர்பிய டென்னிசு விளையாட்டு வீரர்
- 1984 – ஜெரோம் டெய்லர், யமெய்க்காத் துடுப்பாளர்
இறப்புகள்
தொகு- 1874 – ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கிலேய சதுரங்க வீரர் (பி. 1810)
- 1940 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (பி. 1846)
- 1969 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1922)
- 1987 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1899)
- 2007 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1921)
- 2014 – ராம நாராயணன், இந்திய இயக்குநர் (பி. 1949)
- 2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (பி. 1934)
- 2021 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக் கலைஞர் (பி. 1924)
சிறப்பு நாள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Olmo, Guillermo D. (2011-07-19). "La derrota más amarga del Ejército español" (in es). ABC. https://www.abc.es/20110715/archivo/abci-desastre-annual-201107150904.html.
- ↑ Rodgers, Lucy; Ahmed, Maryam (April 27, 2018). "Windrush: Who exactly was on board?". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் April 28, 2018.