சூன் 21
நாள்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 21 (June 21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார்.
- 1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.
- 1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.
- 1736 – இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.[1]
- 1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.
- 1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
- 1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.
- 1900 – பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.
- 1919 – கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
- 1919 – இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.
- 1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.
- 1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1963 – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1964 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
- 2000 – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை 'ஊக்குவிப்பது' சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
- 2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
- 2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.
- 2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
- 2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
- 2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.
பிறப்புகள்
தொகு- 598 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656)
- 1863 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (இ. 1932)
- 1870 – கிளாரா இம்மெர்வார், போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)
- 1880 – ஆர்னல்டு கெசெல், அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. 1961)
- 1905 – இழான் பவுல் சார்த்ர, பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)
- 1916 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)
- 1925 – வே. ஆனைமுத்து, பெரியாரிய அறிஞர் (இ. 2021)
- 1926 – கான்ராடு ஹால், பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 2003)
- 1927 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
- 1947 – சீரீன் இபாதி, நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்
- 1953 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)
- 1955 – மிச்செல் பிளாட்டினி, பிரான்சிய துடுப்பாட்ட வீரர்
- 1961 – ஜோக்கோ விடோடோ, இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்
- 1965 – யங் லிவே, சீன விண்வெளிவீரர்
- 1965 – லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
- 1967 – யிங்லக் சினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமர்
- 1979 – கிறிஸ் பிராட், அமெரிக்க நடிகர்
- 1982 – இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
- 1982 – சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்
- 1983 – எட்வேர்ட் சுனோவ்டன், அமெரிக்க செயற்பாட்டாளர்
இறப்புகள்
தொகு- 1377 – மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312)
- 1527 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)
- 1591 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)
- 1631 – யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)
- 1857 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)
- 1874 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)
- 1940 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்துத்துவவாதி (பி. 1889)
- 1954 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)
- 1957 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)
- 1970 – சுகர்ணோ, இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)
- 1994 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)
- 2001 – கே. வி. மகாதேவன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)
சிறப்பு நாள்
தொகு- தந்தையர் தினம் (எகிப்து, லெபனான், ஜோர்தான், சிரியா, உகாண்டா, பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா)
- பன்னாட்டு யோகா நாள்
- உலக இசை நாள்
- உலக மனிதநேய நாள்
- உலக நீராய்வியல் நாள்
- தேசிய பழங்குடிகள் நாள் (கனடா)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.