1788
ஆண்டு 1788 (MDCCLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1788 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1788 MDCCLXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1819 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2541 |
அர்மீனிய நாட்காட்டி | 1237 ԹՎ ՌՄԼԷ |
சீன நாட்காட்டி | 4484-4485 |
எபிரேய நாட்காட்டி | 5547-5548 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1843-1844 1710-1711 4889-4890 |
இரானிய நாட்காட்டி | 1166-1167 |
இசுலாமிய நாட்காட்டி | 1202 – 1203 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 8 (天明8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2038 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4121 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - த டைம்ஸ் நாளிதழ் லண்டனில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- ஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்: சேர் ஆர்தர் பிலிப் தலைமையில் 11 கப்பல்களில் ஆங்கிலேயக் கைதிகள் சிட்னியை வந்தடைந்தனர். முதலாவது கைதிகள் குடியேற்ற பிரதேசம் அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐசாக் பிரிக்ஸ், பில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்கள்.
- பெப்ரவரி 17 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 21 - லூசியானாவின் நியூ ஓலியன்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 11 - ரஷ்ய ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
- அக்டோபர் 1 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
நாள் குறிப்பிடப்படாதவை
தொகுபிறப்புக்கள்
தொகு- சனவரி 22 - ஜார்ஜ் கோர்டன் பைரன் ஒரு ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞரும், புனைவிய (Romanticism) இயக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவர். (இ. 1824)
- மே 10 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) ஒரு பிரான்சிய இயற்பியலாளர். (இ. 1827)
- ஜூன் 15 - ஜான் சல்லிவன் (John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். (இ. 1855)
- ஒகஸ்டஸ் சீபே ஜேர்மனில் பிறந்த பிருத்தானிய பொறியியளாளர். (இ. 1872)
இறப்புக்கள்
தொகு- அருணாசலக் கவிராயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1711)