சூன் 8
நாள்
(ஜூன் 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 8 (June 8) கிரிகோரியன் ஆண்டின் 159 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 160 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார்.
- 632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார்.
- 1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.
- 1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வறட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது.
- 1856 – 194 பிட்கன் தீவினரைக் கொண்ட ஒரு குழு நோர்போக் தீவை அடைந்து அத்தீல் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.
- 1867 – பிரான்சு யோசப் அங்கேரியின் மன்னராக முடிசூடினார்.
- 1887 – ஏர்மன் ஒலரித் துளையிடும் அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1928 – தேசியப் புரட்சி இராணுவத்தினர் பீக்கிங் நகரைக் கைப்பற்றி, அதன் பெயரை பெய்ஜிங் ("வடக்குத் தலைநகர்") என மாற்றினர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ஃபபெட் நடவடிக்கை நிறைவடைந்தது. நார்வே போர்த்தொடரின் இறுதியில் நேசப்படையினர் நார்விக்கில் இருந்து விலகினர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.
- 1949 – எழுத்தாளர் எலன் கெல்லர் உட்பட ஏழு பேரை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாக எஃப்பிஐ அறிக்கை தெரிவித்தது.
- 1953 – மிச்சிகனை சூறாவளி தாக்கியதில் 116 பேர் உயிரிழந்தனர், 340 வீடுகள் சேதமடைந்தன.
- 1953 – வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 1966 – இரண்டு போர் வானூர்திகள் தெற்கு கலிபோர்னியாவில் மோதிக் கொண்டதில் நாசா விமானி ஒருவரும், வான்படை விமானி ஒருவரும் உயிரிழந்தனர்.
- 1967 – ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.
- 1972 – வியட்நாம் போர்: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை அசோசியேட்டட் பிரெசு செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.
- 1982 – போக்லாந்து போர்: 56 பிரித்தானியப் படையினர் அர்ஜெந்தீன வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
- 1984 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்பால்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
- 1992 – முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.
- 1995 – படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
- 2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அவதானிக்கப்பட்டது.
- 2007 – இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.
- 2007 – ஆத்திரேலியாவில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். வணிகக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.
- 2008 – உக்ரைனில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 37 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.
- 2014 – பாக்கித்தான் கராச்சியில் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- 1625 – ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1712)
- 1810 – ராபர்ட் சூமான், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1856)
- 1867 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1959)
- 1874 – சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கை அரசியல்வாதி, சட்டசபை சபாநாயகர் (இ. 1966)
- 1916 – பிரான்சிஸ் கிரிக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர், நரம்பியலாளர் (இ. 2004)
- 1918 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (இ. 2006)
- 1921 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2008)
- 1930 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இ. 1999)
- 1941 – ஜார்ஜ் பெல், ஆத்திரேலியக் கர்தினால் (இ. 2023)
- 1955 – டிம் பேர்னேர்ஸ்-லீ, உலகளாவிய வலையை உருவாக்கிய ஆங்கிலேயக் கணினியாளர்
- 1957 – டிம்பிள் கபாடியா, இந்திய நடிகை
- 1975 – சில்பா செட்டி, இந்திய நடிகை
இறப்புகள்
தொகு- 632 – முகம்மது நபி, இசுலாமியத்தை உருவாக்கிய சமயத் தலைவர் (பி. 570/571)
- 1809 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1737)
- 1845 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (பி. 1767)
- 1951 – புதுக்கோட்டை சீனு, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், எழுத்தாளர்
- 1968 – மதுரை மணி ஐயர், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1912)
- 1969 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (பி. 1885)
- 1970 – ஆபிரகாம் மாசுலோ, அமெரிக்க உளவியலாளர் (பி. 1908)
- 1986 – தாமசு பறோ, ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (பி. 1909)
- 1990 – பி. ஏ. பெரியநாயகி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி, நடிகை (pi. 1927)
- 2009 – ஹபீப் தன்வீர், இந்திய நாடகாசிரியர், இயக்குநர், நடிகர் (பி/ 1923)
- 2012 – கே. எஸ். ஆர். தாஸ், தெலுங்குத் திரைப்பட இயக்குநர் (பி. 1936)
- 2016 – கே. கே. கத்யால், இந்தியப் பத்திரிகையாளர்