நியூ சவுத் வேல்ஸ்

ஆசுத்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம்

நியூ சவுத் வேல்சு (New South Wales, சுருக்கமாக NSW) அவுத்திரேலியாவின் மக்கள் அடர்த்தி கூடிய மாநிலமாகும். நாட்டின் தென்-கிழக்கே, விக்டோறியா மாநிலத்துக்கு வடக்கே, குயீன்சுலாந்து மாநிலத்திற்கு தெற்கேயும் இது அமைந்துள்ளது. இம்மாநிலம் 1788இல் ஒரு தண்டனைக் குடியேற்றமாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது அவுத்திரேலியாவின் அநேகமான பகுதிகளைக் கொண்டிருந்தாலும், பின்னர் தசுமேனியா 1825 இலும் தெற்கு ஆத்திரேலியா 1836 இலும், விக்டோறியா 1855 இலும் குயீன்சுலாந்து 1859 இலும் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் பின்னர் 1901இல் அவுத்திரேலிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டன.

நியூ சவுத் வேல்ஸ்
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): முதல் மாநிலம்
குறிக்கோள்(கள்): "Orta Recens Quam Pura Nites"
புதிதாக எழுந்தது, எவ்வளவு பிரகாசமாய் நீ ஒளிர்கிறாய்
ஆஸ்திரேலிய வரைபடத்தில் நியூ சவுத் வேல்ஸ்
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் சிட்னி
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் டேவிட் ஊர்லி
முதல்வர் கிளாடிசு பெரெசிக்லியன் (தாராளவாதக் கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை 50
 - செனட் 12
மொத்த தேசிய உற்பத்தி (2006-07)
 - உற்பத்தி ($m)  $321,325[1] (1வது)
 - தலா/ஆள்வீதம்  $46,816 (5வது)
மக்கள்தொகை (ஜூன் 2012 இறுதி)
 - மக்கள்தொகை  7,272,800 (1வது)
 - அடர்த்தி  8.60/கிமீ² (3வது)
22.3 /சது மைல்
பரப்பளவு  
 - மொத்தம்  8,09,444 கிமீ²
3,12,528 சது மைல்
 - நிலம் 8,00,642 கிமீ²
3,09,130 சது மைல்
 - நீர் 8,802 கிமீ² (1.09%)
3,398 சது மைல்
உயரம்  
 - அதிஉயர் புள்ளி கொஸ்கியஸ்கோ மலை
2,228 மீ (7,310 அடி)
 - அதிதாழ் புள்ளி கடல் மட்டம்
நேரவலயம் UTC+10 (UTC+11 பசேநே)
(½-மணி வேறுபாடுகள்)
குறியீடுகள்  
 - அஞ்சல் NSW
 - ISO 3166-2 AU-NSW
அடையாளங்கள்  
 - மலர் வராட்டா
(Telopea speciosissima)
 - பறவை குக்கபூரா
(Dacelo gigas)
 - மிருகம் Platypus
(Ornithorhynchus anatinus)
 - மீனினம் Blue groper
(Achoerodus viridis)
 - நிறங்கள் வான் நீலம்
(Pantone 291)
வலைத்தளம் www.nsw.gov.au

வரலாறு

தொகு

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 40,000 வருடங்களுக்கு முந்தய காலத்தில் ஆத்திரேலியத் தொல்குடிகள் குடியேறி இருக்கிறார்கள். ஐரோப்பியரின் வருகைக்கு முன்னராக இந்த பிராந்தியத்தில் 250,000 பழங்குடி மக்கள் வாழ்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலக்கோடு

தொகு
  • 1770: கப்டன் ஜேம்ஸ் குக் நியூ ஹொலண்ட் என்னும் பகுதியின் கிழக்குக் கரையை அடைந்து அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
  • 1788: கப்டன் ஆர்தர் பிலிப் என்பவர் ஜக்சன் துறையில் பிரித்தானிய கைதிகள் கொலனியை உருவாக்கினார். இதுவே தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி ஆகும்.

2013ஆம் ஆண்டு காட்டுத் தீ

தொகு

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013 அக்டோபரில் பருவகாலத்துக்கு முன்னரே காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்து.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Australian National Accounts: State Accounts, 2006-07
  2. "ஆஸி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2013.

வெளி இணைப்புக்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_சவுத்_வேல்ஸ்&oldid=4087088" இலிருந்து மீள்விக்கப்பட்டது