ஆர்தர் பிலிப்

ஆர்தர் பிலிப் (Arthur Phillip, அக்டோபர் 11, 1738ஆகஸ்ட் 31, 1814) பிரித்தானிய றோயல் கடற்படை அட்மிரலும் காலனித்துவ நிர்வாகியுமாவார். பிலிப் ஆஸ்திரேலியா கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக,[1] இருந்தவர். இவரே சிட்னி நகரை அமைத்தவர் ஆவார்.

ஆர்தர் பிலிப்
Arthur Phillip
சார்புஐக்கிய இராச்சியம் பெரிய பிரித்தானியா
சேவை/கிளைறோயல் கடற்படை
தரம்அட்மிரல்
போர்கள்/யுத்தங்கள்ஏழாண்டுப் போர்
வேறு செயற்பாடுகள்நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

ஆர்தர் பிலிப் தனது 15வது அகவையில் பிரித்தானியாவின் றோயல் கடற்படையில் சேர்ந்தார். 1756 இல் மத்தியதரைப் பகுதியில் மினோர்க்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பங்குபற்றினார். 1762 லெப்டினண்ட் ஆக பதவிஉயர்வு பெற்றார். 1763 இல் போர் முடிவடைந்ததும் இவர் திருமணம் புரிந்து கொண்டு ஹாம்ப்ஷ்யரில் விவசாயத் தொழிலில் ஈடுபடலானார்.

1774 இல் பிலிப் போர்த்துக்கல் கடற்படைக் கப்டனாகச் சேர்ந்து ஸ்பெயினுக்கெதிரான போரில் பங்கு பற்றினார். போர்த்துக்கலுடன் பணியில் இருக்கும் போது இவர் போர்த்துக்கல் கைதிகளை பிரேசில் நாட்டுக்கு கொண்டு சென்று குடியேற்றும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டார். இதன் காரணமாகவோ என்னவோ பிலிப் சிட்னிக்கான பயணத்தை மேற்கொள்ளவென பிரித்தானிய அரசினால் அழைக்கப்பட்டார். 1778 இல் இங்கிலாந்து மீண்டும் போரில் ஈடுபட்டது. இதனால் பிலிப் மீண்டும் போர்ச் சேவைக்கு அழைக்கப்பட்டு 1781 இல் இயூரோப் என்ற கப்பலுக்கு கப்டனானார்.

நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்

தொகு

அக்டோபர் 1786 இல், பிலிப் HMS சிரியஸ் என்ற கடற்படைக் கப்பலுக்கு காப்டனாகவும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் புதிதாக கைதிகளுக்காக அமைக்கப்படவிருந்த நியூ சவுத் வேல்ஸ் என்ற காலனி நாட்டுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவர் கொண்டு சென்ற 772 கைதிகளைக் முதல் தொகுதி மே 13, 1787 இல் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டது. இவர்களில் கடற்பயணத்தின் போது உயிர் தப்பியவர்கள் 732 பேர் மட்டுமே. இந்த 732 பேரும் படிப்பறிவோ அல்லது வேலைத்திறனோ அற்றவர்கள். சேரிகளில் சில சில்லறை திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். பிலிப்புடன் புதிய காலனியை நிர்வகிப்பதற்காக சிலரும் சென்றிருந்தனர்.

பிலிப்பின் கப்பல் பொட்டனி பே என்ற இடத்தை[2] ஜனவரி 18, 1788 இல் அடைந்தது. இந்த இடம் குடியேற்றத் திட்டத்திற்கு உகந்ததாக இல்லாத காரணத்தினால் அவர்கள் மேலும் நகர்ந்து போர்ட் ஜாக்சன் என்ற இடத்தை ஜனவரி 26, 1788 இல் அடைந்தனர். சிட்னி பிரபுவின் நினைவாக இதற்கு அவர் சிட்னி எனப் பெயர் சூட்டினார்.

சிட்னி துறைமுகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஈயோரா பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் பிலிப் உதறுதியாக இருந்தார். பழங்குடிகள் எவரைனும் கொல்லப்பட்டால் மரணதண்டனைக்கு உள்ளானார்கள். பிலிப் பெனலோங் என்ற பழங்குடிமகன் இர்ர்வராருடன் நட்புக் கொண்டு தான் இங்கிலாந்து திரும்பும் போது அவரையும் அழைத்துச் சென்றார்.

குடியேற்ற நாடு அமைப்பு

தொகு

1790 ஆம் ஆண்டளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 2,000 பேர் வரையிலானவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன. உணவுப் பொருட்கள் பயிரிடப்பட்டன. ஜூன் 1790 இல் இன்னும் பல நூற்றுக் கணக்கானோர் இங்கிலாந்தில் இருந்து வந்து சேர்ந்தனர்.

நாடு திரும்பல்

தொகு

1792இல் பிலிப்பின் உடல் நிலை திருப்திகரமாக இல்லாமையினால் அவர் இங்கிலாந்து திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 11, 1792இல் பெனெலோங் என்ற அவரது பழங்குடி நண்பரையும் அழைத்துக் கொண்டு கப்பலேறினார். அவர் நியூ சவுத் வேல்சை விட்டுக் கிளம்பும் போது அங்கிருந்த மக்கள் தொகை 4,221 ஆகும். இவர்களில் 3,099 பேர் கைதிகள். பிலிப் மே 1793 இல் லண்டன் வந்து சேர்ந்ததும் தனது சேவையிலிருந்து இளைப்பாறினார்.

பிற்கால வாழ்க்கை

தொகு

பிலிப்பின் மனைவி, மார்கரெட், 1792 இல் இறக்கவே 1794 இல் இசபெல்லா என்பவரை மறுமணம் புரிந்தார். பிலிப்பின் உடல்நிலை சிறிது தேறவே, மீண்டும் 1796 இல் கப்பல் பணியில் சேர்ந்து பிரான்ஸ் நாட்டுடனான போரில் பங்கு பற்றினார். 1805 இல் தனது 67 வது அகவையில் கடற்படையில் இருந்து அட்மிரலாக விலகினார். 1814 இல் இங்கிலாந்தின் பாத் என்ற இடத்தில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Phillip of Australia,Barnard Eldershaw, M. Angus and Robertson 1938
  2. The Voyage of Governor Phillip to Botany Bay With an Account of the Establishment of the Colonies of Port Jackson and Norfolk Island (1789) - from Project Gutenberg

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_பிலிப்&oldid=3282986" இலிருந்து மீள்விக்கப்பட்டது