பெரிய பிரித்தானியா

பெரிய பிரித்தானியா அல்லது பாரிய பிரித்தானியா (Great Britain),சிலநேரங்களில் சுருக்கமாக பிரித்தானியா (Britain) வேல்சு: Prydain Fawr, சுகாத்திசு கேலிக்கு: Breatainn Mhòr, கோர்னீசு: Breten Veur) ஐரோப்பா பெருநிலப் பரப்பின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவு ஆகும். இது உலகின் பெரும் தீவுகளில் ஒன்பதாவது பெரும் தீவாக உள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரும் தீவாகவும் பிரித்தானியத் தீவுகளில் பெரியதாகவும் விளங்குகிறது. 2009ஆம் ஆண்டு மத்தியில் ஏறத்தாழ 60.0 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தத் தீவு, சாவா , ஒன்சூ தீவுகளை அடுத்து மூன்றாவது மிகவும் மக்கள்தொகை கொண்ட தீவாக உள்ளது. பெரும் பிரித்தானியாவை சூழ்ந்து 1,000க்கும் மேலான சிறு தீவுகள் மற்றும் தீவுத்திடல்கள் உளன. அயர்லாந்துத் தீவு மேற்கில் உள்ளது. அரசியல்ரீதியாக பாரிய பிரித்தானியா என்பது இந்தத்தீவை மட்டுமோ அல்லது இதனைச் சூழ்ந்து இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் வேல்சு பகுதிக்குள் அமைந்த தீவுகளைச் சேர்த்துமோ குறிக்கலாம். [6][2][7][8][9]

பெரும் பிரித்தானியா
உள்ளூர் பெயர்: கிரேட் பிரிட்டைன்
Great Britain
Satellite image of Great Britain and Northern Ireland in April 2002.jpg
ஏப்ரல் 6, 2002 அன்று நாசா செய்மதியால் எடுக்கப்பட்ட பாரிய பிரித்தானியாவின் மெய்வண்ணப் படிமம்.
புவியியல்
அமைவிடம்வட மேற்கு ஐரோப்பா
ஆள்கூறுகள்53°49′34″N 2°25′19″W / 53.826°N 2.422°W / 53.826; -2.422
தீவுக்கூட்டம்பிரித்தானியத் தீவுகள்
பரப்பளவு229,848 km2 (88,745 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை9th
உயர்ந்த ஏற்றம்1,344 m (4,409 ft)
உயர்ந்த புள்ளிபென் நெவிஸ்
நிர்வாகம்
ஐக்கிய இராச்சியம்
இங்கிலாந்து
இசுக்கொட்லாந்து
வேல்சு
பெரிய குடியிருப்புலண்டன்
மக்கள்
மக்கள்தொகை60,003,000
(mid-2009 est.)[1][2]
அடர்த்தி277 /km2 (717 /sq mi)

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "ONS: Population Estimates, June 2010" (PDF). 2010-11-14 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-12-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Figure refers to the population of the United Kingdom excluding Northern Ireland, and includes about 500,000 persons on smaller islands.
  3. காப்பகப்படுத்தப்பட்ட நகல், Oxford English Dictionary, 2012-06-17 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2011-12-26 அன்று பார்க்கப்பட்டது, Britain:/ˈbrɪt(ə)n/ the island containing England, Wales, and Scotland. The name is broadly synonymous with Great Britain, but the longer form is more usual for the political unit.
  4. காப்பகப்படுத்தப்பட்ட நகல், Oxford English Dictionary, 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2011-12-26 அன்று பார்க்கப்பட்டது, Great Britain: England, Wales, and Scotland considered as a unit. The name is also often used loosely to refer to the United Kingdom.
  5. Pam Peters (2004). The Cambridge Guide to English Usage. Cambridge, England: Cambridge University Press. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:052162181X. "The term Britain is familiar shorthand for Great Britain" 
  6. Definitions and recommended usage varies. For example, the Oxford English Dictionary defines Britain as an island and Great Britain as a political unit formed by England, Scotland and Wales.[3][4] whereas the Cambridge Guide to English Usage gives Britain as "familiar shorthand for Great Britain, the island which geographically contains England, Wales and Scotland".[5]
  7. "Islands by land area, United Nations Environment Programme". 2018-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-26 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Population Estimates" (PDF). National Statistics Online. Newport, Wales: Office for National Statistics. 24 June 2010. 14 நவம்பர் 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
  9. says 803 islands which have a distinguishable coastline on an Ordnance Survey map, and several thousand more exist which are too small to be shown as anything but a dot.

வெளியிணைப்புகள்தொகு

காணொளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_பிரித்தானியா&oldid=3716129" இருந்து மீள்விக்கப்பட்டது