தீவுக்கூட்டம்

தீவுக்கூட்டம் (archipelago) என்பது தீவுகளின் தொகுப்பு. ஒரே பூகோள இடத்தில் அமைந்துள்ள தனித்தனித் தீவுகளை மொத்தமாக குறிக்கப் பயன்படும் ஒரு பதமாகும்.

மியான்மரிலுள்ள மெர்குயி தீவுக்கூட்டம்

பொதுவாக தீவுக்கூட்டங்கள் ஒரு பெரிய நிலப்பரப்பை சூழ்ந்ததாகயிருக்கும். உதாரணத்திற்கு:- ஸ்காட்லாந்து நாட்டைச்சுற்றி சுமார் 700 தீவுகள் அமைந்துள்ளன. தீவுக்கூட்டத்தால் உருவான முக்கிய ஐந்து நவீன நாடுகளில் இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் முதலியவை குறிப்பிடத்தக்கதாகும். பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேசியா அகும்.[1]. பெரும்பாலான தீவுக்கூட்டஙகள் பின்லாந்தில் உள்ள ஆர்சிபெலகோ கடல் பகுதியில் உள்ளது. தீவுக்கூட்டங்கள் முக்கியமாக எரிமலைகளால் உருவாக்கப்பட்டுகிறது மற்றும் மண்ணரிமானத்தாலும், மண்படிவதாலும், மண்திட்டுக்களாலும் உருவாக்கப்படுகிறது.

அல்பேனியாவில் உள்ள கிஷமில் தீவுக்கூட்டம்

மேற்கோள்கள்தொகு

  1. "Indonesia". The World Factbook. Central Intelligence Agency. 2008-12-04. 2008-12-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவுக்கூட்டம்&oldid=3340233" இருந்து மீள்விக்கப்பட்டது