இசுக்காட்லாந்து இராச்சியம்

இசுக்காட்லாந்து இராச்சியம் (Kingdom of Scotland) வட-மேற்கு ஐரோப்பாவில் 843இல் நிறுவப்பட்ட நாடு ஆகும்; 1707இல் இது இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்து ஒன்றிணைந்த பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது. இதன் ஆட்பகுதி விரிந்தும் சுருங்கியும் மாறியபோதும் பெரிய பிரித்தானியாவின் வடக்கில் தீவின் மூன்றில் ஒருபங்கு நிலத்தை கொண்டுள்ளது. தெற்கில் இங்கிலாந்து இராச்சியத்துடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் பலமுறை தாக்கியுள்ளனர்; இருப்பினும் முதலாம் இராபர்ட்டு தலைமையில் விடுதலைப் போரில் வெற்றிபெற்று பிந்தைய நடுக்காலங்களில் தனி நாடாக விளங்கியது. 1603இல் இசுக்காட்லாந்ந்தின் மன்னர் ஆறாம் ஜேம்சு இங்கிலாந்து அரசராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் விரும்பிய ஒன்றிணைப்புடன் ஒரே முடியாட்சியில் இருந்தன. 1707இல் இரண்டு இராச்சியங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி ஒன்றிணைக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது.

இசுக்காட்லாந்து இராச்சியம்
Rìoghachd na h-Alba  (கேலிக்கு )
Kinrick o Scotland  (சுகாத்து)
843–1707
கொடி of இசுக்காட்லாந்து
கொடி
Royal coat of arms of இசுக்காட்லாந்து
Royal coat of arms
குறிக்கோள்: நெமோ மெ இம்ப்யூன் லாசெசிட்  (இலத்தீன்)
"இழப்பு விலக்கீடு பெற்று எவரும் என்னை தூண்டவியலாது"
"Cha togar m'fhearg gun dioladh"   (கேலிக்)
'"Wha daur meddle wi me?"'  (சுகாத்து)
தலைநகரம்எடின்பரோ¹
பேசப்படும் மொழிகள்கேலிக்கு, சுகாத்து
அரசாங்கம்முடியாட்சி
அரசர் 
• 843-858
முதலாம் கென்னத்
• 1567–1625
ஆறாம் ஜேம்சு (இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு)
• 1702-1707
பெரிய பிரித்தானியாவின் ஆன்
சட்டமன்றம்இசுக்காட்லாந்து நாடாளுமன்றம்
வரலாறு 
• ஒன்றிணைப்பு
843
• லோதியன், இசுட்ராத்கிளைடு இணைப்பு
1124 (உறுதியானது: யோர்க் உடன்பாடு, 1237)
• கல்லோவே இணைப்பு
1234/5
• எப்ரைட்சு, மாண் தீவு , கைத்னெசு இணைப்பு
1266 (பெர்த் உடன்பாடு)
• ஓர்க்னி, ஷெட்லாந்து பிளவு
1472
மே 1 1707
நாணயம்இசுக்காட்டிய பவுண்டு (பன்டு)
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGB-SCT
முந்தையது
பின்னையது
Picts
[[பெரிய பிரித்தானிய இராச்சியம்]]
¹ புதுமைக்காலத்தின் துவக்கத்தில் எடின்பரோவில் நிறுவப்பட்டது, முன்னதாக இசுக்கோனிலும் மற்றும் பிற நகரங்களிலும்.

1482 முதல் இசுக்காட்லாந்தின் நிலப்பரப்பு தற்கால இசுக்காட்லாந்தின் நிலையை எட்டியது. கிழக்கில் வட கடலும் வடக்கிலும் மேற்கிலும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் இதன் எல்லைகளாக உள்ளன.

தொடர்புடைய பக்கங்கள் தொகு

இசுக்காட்லாந்து இராச்சியம்
c843-1707
தொடர்வுறு:
பெரிய பிரித்தானிய இராச்சியம்
1707-1801
தொடர்வுறு :
பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்
1801-1921
தொடர்வுறு :
ஐக்கிய இராச்சியம்
1921 முதல்