1801
1801 (MDCCCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1801 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1801 MDCCCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1832 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2554 |
அர்மீனிய நாட்காட்டி | 1250 ԹՎ ՌՄԾ |
சீன நாட்காட்டி | 4497-4498 |
எபிரேய நாட்காட்டி | 5560-5561 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1856-1857 1723-1724 4902-4903 |
இரானிய நாட்காட்டி | 1179-1180 |
இசுலாமிய நாட்காட்டி | 1215 – 1216 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 13 (寛政13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2051 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4134 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந்த அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு இரண்டும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
- ஜனவரி 1 - ஜூசெப் பியாசி என்பவர் செரெஸ் என்ற dwarf கோளைக் கண்டுபிடித்தார்.
- பெப்ரவரி 9 - பிரான்ஸ், ஆஸ்திரியாக்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 27 - வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
- மார்ச் 23 - உருசியப் பேரரசர் முதலாம் பவுல் கொல்லப்பட்டார். இவரது மகன் முதலாம் அலெக்சாந்தர் பேரரசரானார்.
- சூன் 12 - மருது சகோதரர்கள் ஆங்கிலேயர் தளபதி கர்னல் அக்னியூ விடுத்த அறிக்கைக்கு எதிராக ஜம்புத் தீவு பிரகடனம் செய்தார்கள்.
- சூன் 27 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
- செப்டம்பர் 3 - இலங்கையில் நெல், மற்றும் சிறு தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 24 -மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- பெரிய பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. லண்டனில் 860,035 பேர் பதிவாயினர்.
- பிரான்சில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
தொடர் நிகழ்வுகள்
தொகு- பிரெஞ்சு புரட்சிப் போர் (French Revolutionary Wars 1792-1802)
பிறப்புகள்
தொகு- சனவரி 13 - வில்லியம் டெனிசன் (William Denison), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1856)
- ஏப்ரல் 19 - குஸ்டாவ் பெச்னர் ஜெர்மனியை சேர்ந்த கவிஞர், தத்துவமேதை. (இ:1887)
- திசம்பர் 10 - ரிச்சர்ட் பெர்ன்ஸ் (Richard Berens), இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1859)
இறப்புகள்
தொகு- அக்டோபர் 24 - மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்.
- நவம்பர் 16 - ஊமைத்துரை, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.