சனவரி 11
நாள்
(ஜனவரி 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 11 (January 11) கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர்.[1]
- 1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார்.
- 1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
- 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
- 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
- 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின.[2][3] ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
- 1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு சந்திரன்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
- 1805 – அமெரிக்காவில் மிச்சிகன் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
- 1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சஸ் அருகே அலபாமா என்ற கப்பல் ஆட்டரசு என்ற கப்பலை மோதி மூழ்கடித்தது.
- 1879 – ஆங்கில-சூலூ போர் ஆரம்பமானது.
- 1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
- 1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1923 – முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் செருமனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.
- 1935 – அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
- 1946 – கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
- 1957 – ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
- 1962 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.
- 1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
- 1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
- 1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1994 – அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது.
- 1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
- 2013 – சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.
பிறப்புகள்
- 347 – முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (இ. 395)
- 1209 – மோங்கே கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1259)
- 1755 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்கப் பொருளியலாளர், அரசியல்வாதி (இ. 1804)
- 1786 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)
- 1842 – வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (இ. 1910)
- 1859 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (இ. 1925)
- 1901 – பிலிப் குணவர்தன, இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1972)
- 1906 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (இ. 2008)
- 1911 – சானா, இலங்கை நாடகாசிரியர், வானொலி நாடகக் கலைஞர் (இ. 1979)
- 1944 – சிபு சோரன், இந்திய அரசியல்வாதி
- 1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
- 1954 – கைலாசு சத்தியார்த்தி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய செயற்பாட்டாளர்
- 1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாளர்
- 1981 – கிரண் ராத்தோட், இந்தியத் திரைப்பட நடிகை
- 1993 – மிதிலா பார்க்கர், இந்திய நடிகை
இறப்புகள்
- 140 – ஹைஜீனஸ் (திருத்தந்தை) (பி. 74)
- 1753 – ஹேன்ஸ் ஸ்லோன், அரிய-ஆங்கிலேய மருத்துவர் (பி. 1660)
- 1928 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)
- 1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
- 1966 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (பி. 1904)
- 1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
- 1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
- 2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
- 2008 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
- 2013 – ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)
- 2014 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
- 2019 – சு. சுசீந்திரராஜா, இலங்கைத் தமிழ் மொழியியலாளர் (பி. 1933)
- 2022 – எம். முத்துராமன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்
சிறப்பு நாள்
- குழந்தைகள் நாள் (தூனிசியா)
- குடியரசு நாள் (அல்பேனியா)
மேற்கோள்கள்
- ↑ Muhammad: Islam’s First Great General, by Richard A. Gabriel, p.176.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
வெளி இணைப்புகள்