1901
1901 (MCMI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பமும் அதன் முதலாவது ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1901 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1901 MCMI |
திருவள்ளுவர் ஆண்டு | 1932 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2654 |
அர்மீனிய நாட்காட்டி | 1350 ԹՎ ՌՅԾ |
சீன நாட்காட்டி | 4597-4598 |
எபிரேய நாட்காட்டி | 5660-5661 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1956-1957 1823-1824 5002-5003 |
இரானிய நாட்காட்டி | 1279-1280 |
இசுலாமிய நாட்காட்டி | 1318 – 1319 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 34 (明治34年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2151 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4234 |
நிகழ்வுகள்தொகு
- ஜனவரி 1 - பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன கூட்டமைக்கப்பட்டு ஆஸ்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரு நாடாக்கப்பட்டது. எட்மண்ட் பார்ட்டன் முதலாவது பிரதமர் ஆனார்.
- ஜனவரி 22 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானார். அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
- மார்ச் 1 - இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தத் தொகை 3,565,954; வட மாகாணம்: 340,936; யாழ்ப்பாணம்: 33,879.
- மே 9 - ஆஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ன் நகரில் அமைக்கப்பட்டது.
- மே 24 - தெற்கு வேல்சில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டார். இவர் 8 நாட்களின் பின்னர் இறந்தார்.
- அக்டோபர் 29 - வில்லியம் மக்கின்லியைச் சுட்டுக் கொன்ற லியோன் க்சோல்கொஸ் என்பவவானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 10 - முதலாவது நோபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோல்மில் இடம்பெற்றது.[1]
தேதி அறியப்படாதவைதொகு
- மெய்வழிச்சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
பிறப்புகள்தொகு
- டிசம்பர் 5 - வால்ட் டிஸ்னி, ஓவியர் (இ. 1966)
- டிசம்பர் 19 - ருடால்ப் ஹெல், ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர்.
- டிசம்பர் 20 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
இறப்புகள்தொகு
- ஜனவரி 1 - சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழறிஞர் (பி. 1832)
- ஜனவரி 14 - சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1822)
- ஆகஸ்ட் 21 - அடோல்ஃப் ஃபிக், தொடு வில்லையைக் கண்டு பிடித்தவர் (பி. 1829
நோபல் பரிசுகள்தொகு
1901 நாட்காட்டிதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "மனிதநேய சங்கம்!". தி இந்து (தமிழ்). 4 மே 2016. 5 மே 2016 அன்று பார்க்கப்பட்டது.