மார்ச்சு 14
நாள்
(மார்ச் 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 14 (March 14) கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார்.
- 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.
- 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.
- 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
- 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.[1]
- 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் அலபாமாவில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
- 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2]
- 1900 – "தங்கத் தகுதரச் சட்டம்" அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்க டாலர் நாணயம் தங்கத்தின் தரத்தில் வைக்கப்பட்டது.
- 1903 – பனாமா கால்வாயை அமைக்கும் பொறுப்பை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை கொலம்பிய மேலவை பின்னர் நிராகரித்தது.
- 1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
- 1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
- 1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
- 1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: கிராக்கோவ் வதைமுகாம் மூடப்பட்டது.
- 1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
- 1961 – இரண்டு முறிந்த அம்பு என்ற அணுவாயுதங்களைக் கொண்டு சென்ற அமெரிக்க வான்படையின் வானூர்தி கலிபோர்னியாவில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
- 1978 – இசுரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
- 1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
- 1982 – தென்னாப்பிரிக்க அரசு இலண்டன், ஆபிரிக்க தேசிய காங்கிரசு தலைமையகம் மீது குண்டு வீசியது.[3]
- 1994 – லினக்சு கருனி 1.0.0 வெளியிடப்பட்டது.
- 1995 – உருசிய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்க விண்ணோடி ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாக சென்றார்.
- 1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
- 2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 2008 – திபெத்தின் லாசா நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
- 2019 – மொசாம்பிக்கை சூறாவளி தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1835 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (இ. 1910)
- 1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885)
- 1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர், கல்வியாளர் (இ. 1955)
- 1895 – குருமுக் நிகால் சிங், இந்திய அரசியல்வாதி
- 1908 – சி. எக்ஸ். மார்ட்டின், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1918 – கே. வி. மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001),
- 1933 – மைக்கேல் கெய்ன், ஆங்கிலேய நடிகர்
- 1948 – பில்லி கிறிசுடல், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1955 – மனோகர் பாரிக்கர், இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்
- 1958 – இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்
- 1960 – எய்தி ஏம்மல், அமெரிக்க வானியலாளர்
- 1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர்
- 1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1986 – ஜேமி பெல், ஆங்கிலேய நடிகர்
- 1994 – ஏன்சல் எல்கோர்ட், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1883 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818)
- 1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854)
- 1973 – அவார்டு அயிக்கன், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1900)
- 1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
- 2007 – இசுடெல்லா செஸ், அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. 1914)
- 2010 – விந்தா கரண்டிகர், மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1918)
- 2018 – ஸ்டீவன் ஹாக்கிங், ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. 1942)
- 2018 – வசந்தா வைத்தியநாதன், ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்
சிறப்பு நாள்
- நானக்சாகி புத்தாண்டு (சீக்கியம்)
- மாவீரர் நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்)
- தாய்மொழி நாள் (எசுத்தோனியா)
- பை நாள்
மேற்கோள்கள்
- ↑ "Londenden 3 April" (in Dutch). Amsterdamsche Courant (Amsterdam: Mattheus Cousart) (15): p. 1. 1674-04-03. 1674-04-10. https://resolver.kb.nl/resolve?urn=ddd:010899007.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 65
- ↑ Davies, Nick (15 March 2013). "From the archive, 15 March 1982: Bomb blast at ANC London office". The Guardian. https://www.theguardian.com/theguardian/2013/mar/15/anc-apartheid-bomb-london-office. பார்த்த நாள்: 8 September 2014.