ஆமிர் கான்
முகமது ஆமீர் உசேன் கான் (Aamir Khan பிறப்புஃ 14 மார்ச் 1965, இவர் ஓர் இந்திய நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை ஆவார். ஊடகங்களில் "மிஸ்டர் பெர்ஃபெக்சனிஸ்ட்" என்று குறிப்பிடப்படும் இவர், பல்வேறு திரைப்பட வகைகளில், குறிப்பாக கல்வி மற்றும் பாலின சமத்துவம் போன்ற சமூகப் பிரச்சினைகளை எழுப்பும் அல்லது இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களில் நடித்தமைக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3][4] 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் வாழ்க்கையின் மூலம், கான் இந்திய சினிமாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[5][6] ஒன்பது பிலிம்பேர் விருதுகள், நான்கு தேசியத் திரைப்பட விருதுகள் மற்றும் ஓர் ஆக்டா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் 2010 ஆம் ஆண்டில் பத்ம பூசண் ஆகிய விருதுகளை இந்திய அரசு இவருக்கு வழங்கியுள்ளது, மேலும் 2017 ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்திடமிருந்து கவுரவப் பட்டத்தைப் பெற்றார்.[7][8]
ஆமிர் கான் | |
---|---|
2015 இல் ஆமிர் கன் | |
பிறப்பு | முகமது ஆமீர் உசேன் கான் 14 மார்ச்சு 1965 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
கல்வி | நார்சீ மோஞ்சே கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–present |
அமைப்பு(கள்) |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 3 (ஜுனைத் கான் உட்பட) |
புகழ்ப்பட்டம் |
|
அமீர்கான் முதன்முதலில் தனது மாமா நசீர் ஹுசைனின் யாதோன் கி பாராத் (1973) படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையில் தோன்றினார். கயாமத் சே கயாமத் தக் (1988) படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து முழுநேர நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ராக் (1989) படத்தில் இவரது நடிப்பிற்காகச் சிறப்புப் பிரிவில் தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது. 1990களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற தில் (1990), ரங்கீலா (1995), ராஜா இந்துஸ்தானி (1996) உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், இதற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதை வென்றார்.[9]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமுகமது அமீர் உசேன் கான் 1965 மார்ச் 14- இல் மும்பையில் திரைப்படத் தயாரிப்பாளரான தாஹிர் உசேன் மற்றும் ஜீனத் உசேன் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[10][11] பைசல் கான் எனும் இளைய சகோதரரும் ஃபர்ஹத் மற்றும் நிகாத் கான் எனும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[12][13][14]
இவரது குடும்பம் ஆப்கானித்தானில் உள்ள ஹெறாத்தினைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது கானின் தந்தைவழித் தாத்தா ஒரு பஷ்தூன் ஜமீன்தார் பின்னணியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியராக இருந்தார், அதே நேரத்தில் இவரது தந்தைவழிப்பாட்டி ஓர் அராபியர் ஆவார், இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவினைப் பூர்வீகமாகக் கொண்டவரும் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் மருமகளுமாவார்.[15] மவுலானா ஆசாத்தைப் பற்றி ஒரு படம் தயாரிக்க கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.[15][16] மணிப்பூரின் 16வது ஆளுநரும், மவுலானா ஆசாத்தின் பேத்தியுமான நஜ்மா ஹெப்துல்லா இவரது உறவினர் ஆவார்.[17]
தொழில் வாழ்க்கை
தொகுஉசைனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர்களால் இயக்கப்பட்ட ஆவணப்படங்களிலும் நடித்தார்.[18] இயக்குநர் கேதன் மேத்தா அந்தப் படங்களில் கானைக் கவனித்தார், மேலும் குறைந்த நிதியில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான ஹோலியில் இவருக்கு ஒரு கதாப்பாத்திரத்தை வழங்கினார்.[18][19] இது ஹோலி மகேஷ் எல்குஞ்ச்வாரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இந்தியாவில் பகிடிவதை நடைமுறையைக் கையாண்டது[20] நியூயார்க் டைம்ஸ் இந்த படம் "மிகையுணர்ச்சி கொண்டது" ஆனால் "தொழில்முறை அல்லாத நடிகர்களால் மிகவும் கண்ணியமாகவும் உற்சாகமாகவும் நிகழ்த்தப்பட்டது" என்று விம்ர்சனம் செய்திருந்தது.[21]
ஹோலி பரந்த பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டது, ஆனால் உசைனும் அவரது மகன் மன்சூரும் அறிமுகமான கயாமத் சே கயாமத் தக் (1988) படத்தில் ஜூஹி சாவ்லாவிற்கு இணையாக ஆமிர் கானை நடிக்க வைத்தனர்.[20] இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. ஆமிர் கான் பரவலாக அறியப்பட்ட நாயகராக ஆனார். சிறந்த அறிமுக நாயகர் உட்பட ஏழு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றது.[22]
திரைப்பட வாழ்க்கை
தொகுநடிகராக
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1973 | யாடோன் கி பாரத் | இளம் ராடன் | |
1974 | மத்தோஷ் | குழந்தை நட்சத்திரம் | |
1984 | ஹோலி | மதன் ஷர்மா | |
1988 | குயாமத் சே குயாமத் டக் | ராஜ் | வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
1989 | ராக் | அமீர் ஹூசைன் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
லவ் லவ் லவ் | அமித் | ||
1990 | அவ்வல் நம்பர் | சன்னி | |
தும் மேரே ஹோ | சிவா | ||
dil | ராஜா | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
தீவானா முஜ் சா நஹின் | அஜய் ஷர்மா | ||
ஜவானி ஜிந்தாபாத் | ஷஷி | ||
1991 | அஃப்சானா பியார் கா | ராஜ் | |
தில் ஹாய் கி மன்டா நஹின் | ரகு ஜெட்லி | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
இசி கா நாம் ஜிந்தகி | சோட்டு | ||
டவ்லட் கி ஜங்க் | ராஜேஷ் சௌத்ரி | ||
1992 | ஜோ ஜீடா ஓஹி சிக்கந்தர் | சஞ்சய்லால் ஷர்மா | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
1993 | பரம்பரா | ரன்பீர் பிருத்வி சிங் | |
ஹம் ஹெயின் ரஹி பியார் கே | ராகுல் மல்ஹோத்ரா | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
1994 | அன்டாஸ் அப்னா அப்னா | அமர் மனோகர் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
1995 | பாசி | இன்ஸ்பெக்டர் அமர் தாம்ஜீ | |
ஆடங்க் ஹை ஆடங்க் | ரோஹன் | ||
ரங்கீலா | முன்னா | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
அகேலே ஹம் அகேலே தம் | ரோஹித் | ||
1996 | ராஜா இந்துஸ்தானி | ராஜா இந்துஸ்தானி | வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது |
1997 | இஷ்க் | ராஜா | |
1998 | குலாம் | சித்தார்த் மராத்தே | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் பிலிம்பேர் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
1999 | சர்ஃபரோஸ் | அஜய் சிங் ரத்தோட் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
மாண் | தேவ் கரண் சிங் | ||
எர்த் (1947 ) | தில் நவாஷ் | ||
2000 | மேலா | கிஷன் பியாரே | |
2001 | லகான் | புவன் | வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது |
தில் சாத்தா ஹை | ஆகாஷ் மல்ஹோத்ரா | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
2005 | மங்கள் பண்டே: தி ரய்சிங் | மங்கள் பாண்டே | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
2006 | ரங் தே பசந்தி | தல்ஜித் சிங் 'DJ' | சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
ஃபனா | ரேஹன் குவாத்ரி | ||
2007 | தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) | ராம் ஷங்கர் நிகும்ப் | சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார் |
2008 | கஜினி | சஞ்சய் சிங்கானியா. | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
2009 | லக் பை சான்ஸ் | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
திரீ இடியட்ஸ் | ரன்ச்சொட்தாஸ் ஷமலல்தாஸ் சந்சாத் (ராஞ்சோ )/ ப்ஹன்சுக் வான்கடு |
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் | |
2010 | டெல்லி பெல்லி | கௌரவத் தோற்றம் | |
பின்னணி பாடியவை
தொகுஆண்டு | திரைப்படம் | பாடல் |
---|---|---|
1998 | குலாம் | ஆடி க்யா கண்டலா |
2000 | மேளா | தேகோ 2000 ஜமானா ஆ கயா |
2005 | மங்கள் பண்டே: தி ரய்சிங் | ஹோலி ரே |
2006 | ரங் தே பசந்தி | லால்கார் |
ஃபனா | சந்தா சம்கே | |
2007 | தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) | பம் பம் போலே |
தயாரித்தவை
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | லகான் | ஆஷூதோஷ் கோவாரிகர் | முழுமையான பொழுதுபோக்கு வழங்கிய சிறந்த பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது வென்றது , சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது வென்றது |
2007 | தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) | அமீர் கான் | சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது வென்றது |
2008 | ஜானே தூ யா ஜானே நா | அப்பாஸ் டயர்வாலா | சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது |
2009 | டெல்லி பெல்லி | அபினய் டியோ |
எழுத்தாளர்/இயக்குநர்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1988 | குயாமத் சே குயாமத் டக் | கதாசிரியர் |
1993 | ஹம் ஹெயின் ரஹி பியார் கே | திரைக்கதை ஆசிரியர் |
2007 | தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) | இயக்குநர் பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது வென்றார் |
குறிப்புகள்
தொகு- ↑ "mr perfectionist aamir khan doesnt believe in perfection shares how got the title". The Tribune. Archived from the original on 16 May 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Aamir Khan Birthday: Why 'Mr. Perfectionist' has delivered more hits than other Khans in the past decade?". Zee Business. 14 March 2023. Archived from the original on 14 January 2024. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Aamir Khan Turns 58: A Look At Actor's Most Unconventional Roles - The Perfectionist Of Bollywood". The Economic Times. Archived from the original on 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "The real Aamir Khan: How Bollywood's Mr Perfectionist remained relevant for 35 years in ever-changing India". The Indian Express (in ஆங்கிலம்). 29 April 2023. Archived from the original on 30 July 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Readers' Picks: Top Bollywood Actors". Rediff. 17 August 2006. Archived from the original on 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ "Powerlist: Top Bollywood Actors". Rediff. 8 August 2006. Archived from the original on 24 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Aamir Khan: The Chinese heartthrob பரணிடப்பட்டது 7 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், The Afternoon Despatch & Courier, 16 May 2017
- ↑ Press Trust India (30 November 2000). "I become the audience". Rediff. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ Swarup, Shubhangi (29 January 2011). "My Name is Mohammed Aamir Hussain Khan". Open. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014.
- ↑ Arnold P. Kaminsky; Roger D. Long PhD (30 September 2011). India Today: An Encyclopedia of Life in the Republic: An Encyclopedia of Life in the Republic. ABC-CLIO. pp. 407–408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37463-0.
- ↑ "Azad has Aamir's mannerisms, says Aamir's sister". The Times of India. 3 August 2012 இம் மூலத்தில் இருந்து 16 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230316023751/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Azad-has-Aamirs-mannerisms-says-Aamirs-sister/articleshow/15326025.cms.
- ↑ "Aamir's family condemns father, Faisal". Rediff.com. 2 November 2007. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 October 2023.
- ↑ "Aamir's life in pics". NDTV. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
- ↑ 15.0 15.1 Manwani, Akshay (2016). Music, masti, modernity: the cinema of Nasir Husain (First published in India ed.). Noida, Uttar Pradesh, India: HarperCollins Publishers India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5264-097-3.
Jaffar Husain was a Pathan and belonged to a family of zamindars, albeit of modest landholdings, settled in Shahabad (...) Aamna, Husain's mother, was of Arab ancestry. Her forefathers originally hailed from Jeddah before successive generations found their way to Calcutta, finally settling in Bhopal (...) his maternal grandmother, Fatima Begum, was a well-educated woman and was appointed the inspector of schools by nawaab of Bhopal. This lady's brother was the well-known freedom fighter and scholar Maulana Abul Kalam Azad.
- ↑ "Dream to make a film on Maulana Azad: Aamir Khan". IE Staff. இந்தியன் எக்சுபிரசு. 9 January 2014. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2 February 2015.
- ↑ .
- ↑ 18.0 18.1 "Aamir Khan: Can this Khan create Qayamat?". Movie Mag (Movie Magazine Ltd.) June: 28–29. 1988.
- ↑ Verma, Sukanya. "Aamir Khan's 25 finest movie moments". Rediff.com. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2010.
- ↑ 20.0 20.1 Satyajit Bhatkal (2002). The Spirit of Lagaan. Popular Prakashan. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-003-0.
- ↑ "Movie Review – Holi (1984)". 8 April 1985. https://www.nytimes.com/movie/review?res=9E0CE1D61238F93BA35757C0A963948260.
- ↑ Verma, Sukanya (29 April 2013). "Celebrating 25 years of Qayamat Se Qayamat Tak". Rediff.com. Archived from the original on 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.