தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

தேசிய திரைப்பட விருதுகள் (ஆங்கிலம்:National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்[1]. 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.[2][3]

தேசிய திரைப்பட விருதுகள்
தற்போதைய: 59ஆவது தேசிய திரைப்பட விருதுகள்
விளக்கம்மிகச்சிறந்த இந்தியத் திரைப்படத்தின், திரைப்பட சாதனைகளுக்காக.
Locationவிஞ்ஞான் பவன், புது தில்லி
நாடு இந்தியா
வழங்குபவர்திரைப்பட விழாக்களின் இயக்குநரகம்.
முதலில் வழங்கப்பட்டதுஅக்டோபர் 10, 1954 (1954-10-10)
கடைசியாக வழங்கப்பட்டதுஅக்டோபர் 25, 2021 (2021-10-25)
இணையதளம்http://dff.nic.in

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.[4][5]

வரலாறு தொகு

1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசினால் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.

விருதுகள் தொகு

முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களுக்கு பின்வரும் வகைகளில்[6] விருதுகள் வழங்கப்படுகின்றன.

தங்கத் தாமரை விருது தொகு

அதிகாரபூர்வ பெயர்: சுவர்ண கமல்

வெள்ளித் தாமரை விருது தொகு

அதிகாரபூர்வ பெயர்: இரசத் கமல் அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது:

மேற்கோள்கள் தொகு