அகாதமி விருது

(ஆஸ்கார் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

ஆஸ்கார் விருது
Current awards 92ஆவது அகாதமி விருதுகள்
Academy Award trophy.png
விருதுக்கான
காரணம்
சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது
வழங்கியவர் Academy of Motion Picture Arts and Sciences
நாடு ஐக்கிய அமெரிக்கா
முதலாவது விருது மே 16, 1929
அதிகாரபூர்வ தளம்

வரலாறுதொகு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]

அகாதமி விருதுகள்தொகு

சிறப்பு அகாதமி விருதுகள்தொகு

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
  2. "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. மூல முகவரியிலிருந்து July 30, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஆகஸ்ட் 4, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாதமி_விருது&oldid=2909022" இருந்து மீள்விக்கப்பட்டது