95ஆவது அகாதமி விருதுகள்

ஐக்கிய அமெரிக்காவில் அகாதமி விருதுகள் வழங்கும் விழாவாகும்

95ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழியில்:95th Academy Awards) என்பது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) என்னும் திரைப்படக் குழுமம் மூலம் மார்ச்சு 12, 2023 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் அகாதமி விருதுகள் வழங்கும் விழாவாகும். இவ்விழா 2022ஆம் ஆண்டு உலகளவில் வெளியானத் திரைப்படங்களை கவுரவிக்கும் விதமாக இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு என்ற திரைப்படம், மற்றும் தி எலிபெண்ட் விசுபெரர்சு என்னும் தமிழ் மொழித் திரைப்படம் சிறந்த ஆவணக் குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இவ்விழாவை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். மேலும் இவர் ஏற்கனவே 2017, 2018, மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான 89ஆவது, 90ஆவது மற்றும் 95ஆவது ஆகிய விழாக்களைத் தொகுத்து வழங்கி இவர் மூன்றாவது முறையாக அகாதமி விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகின்றார்.[3]

95-ஆம் அகாதமி விருதுகள்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2023.
திகதிமார்ச்சு 12, 2023
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்ஜிம்மி கிம்மெல்
முன்னோட்டம்
தயாரிப்பாளர்
  • கிளென் வெயிசு
  • இரிக்கி கிர்ஷ்னர்
இயக்குனர்கிளென் வெயிசு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு
அதிக விருதுகள்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (7)
அதிக பரிந்துரைகள்எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (11)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 40 நிமிடங்கள்
மதிப்பீடுகள்18.7 மில்லியன்[2]
 < 94ஆவது அகாதமி விருதுகள் 96ஆவது > 

மேற்கோள்கள் தொகு

  1. Travis, Emlyn (March 10, 2023). "Everything we know about the 2023 Oscars — including celebrity presenters, performances, pre-shows, and more". Entertainment Weekly. Archived from the original on மார்ச்சு 11, 2023. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 12, 2023.
  2. Bell, BreAnna (மார்ச் 13, 2023). "Oscars Draw 18.7 Million Viewers, Up 12% from Last Year". Variety. Archived from the original on மார்ச் 13, 2023. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 14, 2023. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  3. "ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார் ஜிம்மி கிம்மெல்". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). நவம்பர் 9, 2022. https://www.hindutamil.in/amp/news/cinema/hollywood/894704-jimmy-kimmel-returns-as-host-for-the-95th-2023-oscars.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2023. 

வெளியிணைப்புகள் தொகு

செய்திகள்

பிற

"https://ta.wikipedia.org/w/index.php?title=95ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=3926920" இலிருந்து மீள்விக்கப்பட்டது