தி எலிபெண்ட் விசுபெரர்சு

கார்த்திகி கோன்சால்வ்சு இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தி எலிபெண்ட் விசுபெரர்சு (ஆங்கிலத்தில்:The Elephant Whisperers) என்பது 8 திசம்பர் 2022 (2022-12-08) ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி ஆவண குறும்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்சு இயக்கியுள்ளார்.[1] மேலும் இக்குறும்படமானது இந்திய-அமெரிக்கர்களின் கூட்டுத் தயாரிப்பாகும். இந்த ஆவண குறும்படத்தில், தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கிறது. இத்திரைப்படமானது 2022 டிசம்பர் 8 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் படம் வெளியானது.[2] இது 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை மார்ச்சு 12, 2023 ஆம் ஆண்டு அன்று வென்றது.[3] இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது.

தி எலிபெண்ட் விஸ்பெரர்சு
ஆவண குறும்படம்.
நெற்ஃபிளிக்சுவின் அதிகாரப்பூர்வ ஆவண குறும்படத்தின் சுவரொட்டி
இயக்கம்
தயாரிப்பு
இசை
  • இசுவென் பால்கோனர்
ஒளிப்பதிவு
  • கரண் தப்லியால்
  • கிரிஷ் மகிசா
  • ஆனந்த் பன்சால்
  • கார்த்திகி கோன்சால்வ்சு
படத்தொகுப்பு
  • சஞ்சாரி தாசு மோலிக்
  • டொக்ளசு பிளஷ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு8 திசம்பர் 2022 (2022-12-08)
ஓட்டம்39 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஜென்னு குரும்பா

விருதுகள்

தொகு
விருது விழா தேதி வகை பெறுநர்கள் விளைவு மேற்கோள்கள்
அகாதமி விருது மார்ச்சு 12 2023 சிறந்த ஆவணக் குறும்படம் கார்திகி கோன்சால்வ்சு, குனீத் மோங்கா வெற்றி [4][5][6]
டாக் என்ஒய்சி நவம்பர் 9, 2022 குறும்படம்: மாற்றத்தை உருவாக்குபவர்கான தி எலிபெண்ட் விசுபெரர்சு முன்மொழியப்பட்டது [7]
ஊடக விருதுகளில் ஹாலிவுட் இசை நவம்பர் 16, 2022 சிறந்த இசையமைப்பிற்காக – ஆவணக் குறும்படம் இசுவென் பால்கோனர் பரிந்துரை [8]
ஐடிஏ ஆவணப்பட விருதுகள் திசம்பர் 10 2022 சிறந்த ஆவணக் குறும்படம் தி எலிபெண்ட் விசுபெரர்சு பரிந்துரை [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆவணப்பட பார்வை The Elephant Whisperers: காடும் காதலும், நால்வரின் உணர்வுபூர்வ உறவும்!". இந்து தமிழ் (நாளிதழ்). The hindutamil. 23 திசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 12, 2023.
  2. "Documentary 'The Elephant Whisperers' To Drop On December 8 On Netflix". Outlook (Indian magazine) (in ஆங்கிலம்). 22 நவம்பர் 2022. Archived from the original on 23 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2022. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "2023 Oscars Nominations: See the Full List". Academy of Motion Picture Arts and Sciences (in ஆங்கிலம்). 24 சனவரி 2023. Archived from the original on 8 பெப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "95th Oscars: See the Full List of Winners Here". Academy of Motion Picture Arts and Sciences (in ஆங்கிலம்). 12 March 2023. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 March 2023.
  5. Lewis, Hilary (24 January 2023). "Oscars: Full List of Nominations". Hollywood Reporter (in ஆங்கிலம்). Archived from the original on 24 January 2023. பார்க்கப்பட்ட நாள் 24 January 2023.
  6. 95th Oscar Nominations Announcement | Hosted by Riz Ahmed & Allison Williams. Oscar. YouTube. 24 January 2023. Archived from the original on 25 January 2023. பார்க்கப்பட்ட நாள் 24 January 2023.
  7. "Shortlist Shorts: Change Makers". Doc NYC. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  8. "2022 HMMA Nominations". Hollywood Music in Media Awards. Archived from the original on 11 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  9. "38th IDA Documentary Awards Shortlists for Best Features and Shorts". International Documentary Association. Archived from the original on 31 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.

வெளியிணைப்புகள்

தொகு