ஜென்னு குரும்பா மொழி
ஜென்னு குரும்பா (Jennu Kurumba), ஜென் குரும்பா என்றும் அழைக்கப்படும் மொழியானது காட்டுநாயக்கர் பழங்குடியினரால் பேசப்படும் தமிழ்-கன்னட துணைக்குழுவின் திராவிட மொழியாகும். இது பெரும்பாலும் கன்னடத்தின் பேச்சுவழக்கு என்று கருதப்படுகிறது. இருப்பினும், எத்னோலாக் இதை ஒரு தனி மொழியாக வகைப்படுத்துகிறது. ஜென்னு குரும்பா பேசுபவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, கர்நாடகாவின் மைசூர் மற்றும் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டங்களுக்கு இடையேயான நீலகிரி மலைகளின் எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
ஜென்னு குரும்பா Jennu Kurumba | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,00,000 (2011 கணெக்கெடுப்பு)e25 |
தமிழ் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | xuj |
மொழிக் குறிப்பு | jenn1240 (ஜென்னு)[1] |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "ஜென்னு குரும்பா". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.