காட்டு நாயக்கர்
காட்டு நாயக்கர் (Kattunayakar) எனப்படுவோர் இந்திய மாநிலமான கேரளா, கருநாடகா, ஆந்திரா,தமிழ்நாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய பகுதிகளில் வாழுகின்ற பூர்வ பழங்குடியினர் ஆவர்.[1] இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தென் தமிழ்நாடு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் வட தமிழ்நாடு பகுதிகளில் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். இவர்களை காட்டுக் குறும்பர் மற்றும் தொம்ப நாயக்கர் எனவும் அழைப்பர்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் | |
மொழி(கள்) | |
திராவிட மொழி | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
காட்டு நாயக்கர் என்ற சொல்லுக்கு தமிழ் மொழி மற்றும் மலையாள மொழிகளில் காட்டின் ராஜா என்று பொருள்படும். இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் ஒரு மூத்தக்பழங்குடி மக்கள் ஆவர்.[2] இவர்கள் தங்கள் உணவாகக் விலங்குகள் மாமிசத்தை உண்கின்றனர். தேன் சேகரிப்பது, காட்டில் வேட்டையாடுவது இவர்களுடைய முக்கிய தொழிலாகும். இந்த சமூகத்தினர் கறுப்புத் தோல் உடையவர்களாகவும், ஆண்கள் சிறிய அளவில் வேட்டி மற்றும் அரை சட்டைகளை அணிவார்கள். பெண்கள் தங்கள் உடலை கழுத்துக்குக் கீழே ஒரு நீண்ட ஒற்றை துணியால் இணைத்து, தோள்களையும் கைகளையும் வெறுமனே விட்டு விடுகிறார்கள். 1990களுக்கு முன்னர் குழந்தை திருமணங்கள் செய்து வந்தனர், ஆனால் தற்போது பெண்கள் பருவ வயதை அடைந்த பிறகு திருமணம் செய்கிறார்கள். காட்டு நாயக்கர் சமூகத்தினரிடையே ஒருதுணை மணம் என்பது பொதுவான விதியாகும்.
காட்டு நாயக்கர்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் மற்றும் ஒரு மொழியைக் கொண்டிருக்கிறார்கள், இது அனைத்து [[தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாள ஆகிய மொழிகளை கொண்ட திராவிட மொழிகளின் கலவையாகும். அவர் கோத்திரத்தின் முக்கிய தெய்வம் சிவன், விஷ்ணு , குலதெய்வமாக காளியம்மன், மாரியம்மன் மற்றும் பைரவர் ஆகும். இவர்களும் மற்ற இந்துக்களை போல விலங்குகள், பறவைகள், மரங்கள், பாறை மலைகள் மற்றும் பாம்புகளையும் வணங்குகிறார்கள்.
காட்டு நாயக்கர்கள் அசைவ உணவு உண்பவர்கள், இசை, பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவற்றை விரும்புகிறார்கள்.
உசாத்துணை
தொகு- மனோரமா இயர் புக் 2005
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of notified Scheduled Tribes" (PDF). Census India. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
- ↑ "Vibrant tribal expressions". web.archive.org. 2009-07-29. Archived from the original on 2009-07-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.