முதுமலை தேசியப் பூங்கா

இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில், நீலமலைகளில் அமைந்துள்ள 'முதுமலை புலிகள் காப
(முதுமலை வனவிலங்கு காப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம் (Mudumalai National Park) ஆனது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940-இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.

முதுமலை தேசியப் பூங்கா
முதுமலை புலிகள் உய்வகம்
முதுமலை யானை முகாமில் வளர்ப்பு யானை
Map showing the location of முதுமலை தேசியப் பூங்கா
Map showing the location of முதுமலை தேசியப் பூங்கா
Map showing the location of முதுமலை தேசியப் பூங்கா
Map showing the location of முதுமலை தேசியப் பூங்கா
அமைவிடம்நீலகிரி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
அருகாமை நகரம்கூடலூர், நீலகிரி
ஆள்கூறுகள்11°35′N 76°33′E / 11.583°N 76.550°E / 11.583; 76.550
பரப்பளவு321 km2 (124 sq mi)
ஏற்றம்850–1,250 m (2,790–4,100 அடி)
நிறுவப்பட்டது1940 (1940)
நிருவாக அமைப்புதமிழ்நாடு வனத்துறை
வலைத்தளம்https://www.forests.tn.gov.in/

தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956-ஆம் ஆண்டு 295 கி.மீ.2 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கி.மீ.2 பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு

தொகு

முதுமலை சங்ககாலத்தில் முதிரமலை என வழங்கப்பட்டது. குமணன், இளங்குமணன் ஆகிய வள்ளல்கள் மன்னர்களாகவும் விளங்கி இந்த நிலப்பகுதியை ஆண்டுவந்தனர்.

தேசிய வனப்பூங்கா

தொகு

இக்காப்பகத்தில் முதுமலை தேசிய வனப்பூங்கா 103 கிமீ2 பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சி

தொகு

இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் கேரளாவில் வயநாடு வனவிலங்கு காப்பகமும் உள்ளன.

யானைகள் முகாம்

தொகு

முதுமலை வனவிலங்கு காப்பகம் உதகமண்டலத்ததிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ளது.

மோயாறு, இக்காப்பகத்தின் ஊடாக செல்லுகிறது. இங்குள்ள யானைகள் முகாம் பார்வையாளர்களைக் கவரும் ஒன்றாகும்.

விலங்குகள்

தொகு
 
புலி

யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.

பறவைகள்

தொகு
 
தேன் பருந்து

மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, தேன் பருந்து, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் இங்கு உள்ளன.

தாவரங்கள்

தொகு

இங்கு மூன்று வகையான காடுகள் காணப்படுகின்றன. அவை:

  1. வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள்
  2. வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள்
  3. தென் வெப்பமண்டல் புதர் காடுகள்.

இந்த தேசியப் பூங்காவில் மழைப் பொழிவு அதிகமுள்ள மேற்குப் பகுதியில் ஈர இலையுதிர் காடுகளும், மழைப் பொழிவு குறைந்த கிழக்குப் பகுதியில் உலர் இலையுதிர் காடுகளும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris. retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists

வெளி இணைப்பு

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமலை_தேசியப்_பூங்கா&oldid=3791895" இலிருந்து மீள்விக்கப்பட்டது