பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்
IUCN
வகைபன்னாட்டு அமைப்பு
நிறுவுகை05,அக்டோபர் 1948,கிலாண்ட் சுவிட்சர்லாந்து
தலைமையகம்Rue Mauverney 28, 1196 Gland, சுவிட்சர்லாந்து
முதன்மை நபர்கள்வல்லி மூசா
Julia Marton-Lefèvre
தொழில்துறைஇயற்கை வளம், வன உயிர் பாதுகாப்பு
வருமானம்SFr 99,348 (2005)
பணியாளர்உலகெங்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேல்
இணையத்தளம்www.iucn.org

இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.

இவ்வொன்றியம் 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமைப்பாகும். இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு 140 நாடுகளில் உள்ள 1000-இற்கு மேற்பட்ட அமைப்புக்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இவ்வங்கத்தவர்களில், உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 11,000 துறை வல்லுநர்கள் அடங்குவர். இவ்வனைவரையும் ஒருங்கிணைத்து உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு எடுத்து வருகிறது.

செம்பட்டியல்

தொகு
 
கிலாண்டு நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகம்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் ஆண்டுதோறும் செம்பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தாவர மற்றும் விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலையை தர வகைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு