அருகிய இனம்

அருகிய இனம் ( Endangered species) என்பது, எண்ணிக்கைக் குறைவு, சூழல் மற்றும் இரைகொல்லல் அல்லது வேட்டை போன்ற நிகழ்வுகளினால் முற்றிலுமாக அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புள்ள அச்சுறுத்தநிலை உயிரினத்தைக் குறிக்கிறது[2] பொதுவாக இங்கு குறிப்பிடப்படும் இனம் என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையிலான இனம் ஆகும். இத்தகைய அச்சுறுத்தநிலை உயிரினங்கள் மேலும் குறைந்து விடாமல் இருக்கவும், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கவும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பு இத்தகைய வகைப்பாடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை அல்லது பொதுவாக மிக அருகிய இனம் என்ற வகைப்பாட்டுக்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்கும் சிவப்புப் பட்டியல் என்ற வகைப்பாட்டில் அருகிய இனம் என்ற வகைப்பாடு இடம்பெறுகிறது. காடுவாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் ப.இ.பா.ச இன் காப்பு நிலைப் பட்டியலில் இது இரண்டாவது அபாயநிலை வகைப்பாடாகக் கருதப்படுகிறது. ப.இ.பா.ச 2012 ஆம் வெளியிட்ட சிவப்புப் பட்டியலில் 3079 விலங்குகளும், 2655 தாவர இனங்களும் இடம்பெற்றிருந்தன. முன்னதாக 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 1102 மற்றும் 1197 என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

புலி இனத்தின் துணை இனங்களில் ஒன்றான சைபீரியப் புலி இனம் அச்சுறுத்தநிலை எல்லையில் உள்ள ஓர் இனமாகும். புலி இனத்தின் மூன்று துணை இனங்கள் முற்றாகவே அழிந்துவிட்டன.[1]

பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புகளைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன.

காப்பு நிலைதொகு

காப்பு நிலை என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுது எஞ்சியிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க சாத்திய வீதம் அல்லது தெரிந்த ஆபத்துகள் போன்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன[3].ப.இ.பா.ச இன் சிவப்புப் பட்டியல் என்ற காப்பு நிலைப் பட்டியல் உலகளாவிய வகையில் ஒரு சிறந்த தரப்பட்டியல் என்று கருதப்படுகிறது.[4]

உலகின் 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அச்சுறுத்தநிலை ஆபத்ததில் இருப்பதாகக் கருதப்படுகின்றன[5].சர்வதேச அளவில் ஆபத்தான மற்றும் பிற அச்சுறுத்தலான இனங்களைப் பாதுகாக்க்கும் பல்லுயிர்பெருக்க அதிரடி திட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் 199 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, அமெரிக்காவில் இத்தகைய திட்டங்கள் பொதுவாக சிற்றின மீட்பு திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சிவப்புப் பட்டியல்தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்
தலைமையகம்ஐக்கிய இராச்சியம்
சேவை பகுதி
சர்வதேசம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தாய் அமைப்பு
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
வலைத்தளம்http://www.iucnredlist.org

சிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்குகின்ற ஒரு வகைப்பாட்டு நிலைப் பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான சில வகைப்பாடுகள் இங்குத் தரப்பட்டுள்ளன. [1] பரணிடப்பட்டது 2010-07-24 at the வந்தவழி இயந்திரம் [6]:

அருகிய இனமாக மாறுவதற்கான காரணங்கள்தொகு

பருவ நிலை அல்லது கால நிலை மாற்றம், காடுகளை அழித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள்நோய்த்தொற்றுநோய்த்தொற்று அருகிய இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பிரதேசத்திற்கு உரியனவாக இல்லாத பழங்கால இனங்கள், மனிதர்களால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்துவதனாலும், சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய வகையில் சில இனங்கள் அழிந்து போகலாம். அத்தகைய அறிமுக இனங்களை அன்னிய இனங்கள் அல்லது ஆக்கிரமிப்பு இனங்கள் என்று கூறலாம். சில நேரங்களில் ஆக்கிரமிப்பு இனங்கள் அவ்விடத்திலுள்ள பூர்வீக உயிரினங்களுடன் உணவிற்காக அல்லது இரையைப் பெறுவதற்காக சொந்த போட்டி போடுகின்றன. பிற சந்தர்ப்பங்களில், எதிர்பாராத புதிய இனங்களின் வருகை, ஒரு நிலையான சூழலியல் இருப்பின் பாதிப்புக்கும் வழியேற்படுகிறது. புதிய இனங்கள் நோய்த்தொற்றுடன் வரநேர்ந்தால் உள்ளுர் உயிரினங்களிடம் அந் நோயை எதிர்க்கும் சக்தி இல்லாமல் இருந்திருந்தால், அழிந்துபோகவும் நேரிடலாம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்தொகு

பாதுகாப்பான வளர்ப்புதொகு

அருகிய இனமாகவும், அருகிகொண்டிருக்கும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் இனப்பெருக்கம் செய்து அவற்றை வளர்ப்பதனால் பாதுகாக்க முடியும்.

மரபியல் முறையில் இனங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்தொகு
  • அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை அவற்றின் மரபணுக்களைப் பயன்படுத்தி, மரபியல் முறையில் இனவிருத்தி செய்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.
  • உள்ளினப்பெருக்கம் எனப்படும் ஒரே குடும்பத்தை அல்லது வகையை சார்ந்த இனங்களை கொண்டு இனவிருத்தி செய்து பாதுகாக்க வேண்டும்.
  • பாரம்பரிய நகர்வு என்ற மரபியற் பல்வகைமை, அதாவது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை, குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும்.

மேலும் இந்த வகையான உயிரினங்களை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளில் அரிய அல்லது அபாயகரமான இனங்களை இனப்பெருக்கம் செய்யும் செயல் கட்டுப்பாட்டு வளர்ப்பு எனப்படும். இக்கட்டுப்பாட்டுச் செயல்முறையால் அழிந்துவிடும் நிலையிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவை அழிந்து போகாமல் காப்பாற்ற இயலும் [7].

தனியார் பண்ணைகள்தொகு

அழிந்துவரும் விலங்கினங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஆரவமுள்ள தனியார் சேவை பணி புரிபவர்களுக்கு விலங்குகளை வளர்க்க சிறப்பு அனுமதி அளித்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு மேற்பார்வை செய்யலாம்.

அருகிவரும் சில இனங்களின் பட்டியல் மற்றும் வாழும் இடம்தொகு

வரிசை எண் உயிரினங்களின் பெயர் வாழும் இடம்
1 பென்குயின் பறவை ஆப்பிரிக்கா
2 காட்டு நாய் ஆப்பிரிக்கா
3 ஆசிய யானை ஆசிய கண்டம்
4 நீலத்திமிங்கலம் பசிபிக் & அண்டார்டிக் பெருங்கடல்
5 பொனொபோ வகை மனித குரங்குகள் காங்கோ
6 பொர்நியன் ஒராங்குட்டான் வகை மனித குரங்குகள் பொர்நெஒ
7 சிம்பன்சி வகை மனித குரங்குகள் ஆப்பிரிக்கா
8 செந்நாய் இந்தியா, பூடான், இந்தோனேசியா, மியான்மர், மலேசியா, வங்காள தேசம்
9 எத்தியோப்பிய ஓநாய் எத்தியோப்பியா
10 முள்/மயிரடர்ந்த முயல் இந்தியா
11 இராட்சத நீர்கீறி (Giant otter) தென் அமெரிக்கா , அமேசான் காட்டு நதி
12 பாண்டா கரடி சீனா
13 இராட்சத தவளை ஆப்பிரிக்கா
14 தோணியாமை பசிபிக் & அட்லாண்டிக் பெருங்கடல்
15 வரிக்குதிரை கென்யா, எத்தியோப்பியா
16 செந்நீல ஐவண்ணக்கிளி தென்னமெரிக்கா
17 செந்தலைக் கொக்கு ஜப்பான்
18 கருநீல ஐவண்ணக்கிளி பிரேசில்
19 Malayan வகை பன்றி ஆசியா, கிழக்கிந்திய தீவுகள்
20 முறுக்கிய பெரிய கொம்புகளுள்ள காட்டு ஆடு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர், உஸ்பெக்கிஸ்தான்
21 பாரிசிய சிறுத்தைகள் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான்
22 நீண்ட மூக்குடைய குரங்குகள் தென்கிழக்கு ஆசியா, போர்னியோ
23 சிறிய நீர்யானை மேற்கு ஆப்பிரிக்கா, லைபீரியா, கினியா
24 சிகப்பு நிற மார்புடைய வாத்து சைபீரியா, கருங்கடல், ருமேனியா, உக்ரைன்
25 ரோத்ச்சில்த் ஒட்டகசிவிங்கி கென்யா, உகண்டா
26 பனிச்சிறுத்தை மத்திய மற்றும் தெற்கு ஆசிய மலை பகுதி
27 ஸ்டெல்லேர் கடற்சிங்கம் பசிபிக் பெருங்கடல், அலாஸ்கா
28 Scopas tang வகை மீன்கள் ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்ட்ரேலிய, ப்ளோரிடா
29 Takhi வகை குதிரை மத்திய ஆசியா, மங்கோலியா
30 புலி மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா , வடக்கு எல்லையானது தென்கிழக்கு சைபீரியாவில் அமுர் நதியுடன் முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு சுமத்ரா மட்டுமே.
31 வியட்னாமில் வாழும் ஒருவித கோழியினம் (Vietnamese Pheasant) வியட்நாம்
32 Valcano சிறிய முயல் மெக்ஸிகோவின் மலைகள்
33 நீர் எருமை இந்தியாவின் அஸ்ஸாம்
34 எறும்பு தின்னி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா

மேற்கோள்கள்தொகு

  1. சண்டர்பான்சு புலிகள் திட்டம். புலிகளின் அழிவுநிலைத் தகவல்கள் இணையத் தளத்தின் புலிகள் பகுதியில் காணப்படுகின்றன.
  2. "IUCN RED LIST CATEGORIES AND CRITERIA" (PDF). Version 3.1, Second Edition - IUCN RED LIST CATEGORIES AND CRITERIA. IUCN. 10 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "NatureServe Conservation Status". NatureServe. April 2007. 21 செப்டம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Red List Overview". IUCN. February 2011. 27 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Threatened Species". Conservation and Wildlife. 13 September 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. IUCN
  7. "Captive Breeding Populations - National Zoo". Nationalzoo.si.edu. 2009-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகிய_இனம்&oldid=3682039" இருந்து மீள்விக்கப்பட்டது