யானைப் பறவை
யானைப் பறவை (Elephant birds) என்பது அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன.[2][3][4]
யானைப் பறவை புதைப்படிவ காலம்: | |
---|---|
யானைப் பறவையின் எலும்புக்கூடும் அதன் முட்டையும் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Aepyornithidae |
மாதிரி இனம் | |
†Aepyornis maximus Hilaire, 1851 | |
Genera | |
உயிரியற் பல்வகைமை | |
2 genera, 7 species |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Brands, S. (2008)
- ↑ Etienne de Flacourt (1658). Histoire de la grande isle Madagascar. chez Alexandre Lesselin. p. 165. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
- ↑ Ley, Willy (August 1966). "Scherazade's Island". For Your Information. Galaxy Science Fiction. pp. 45–55.
- ↑ Buffetaut, Eric (2019-09-06). "Early illustrations of Aepyornis eggs (1851–1887): from popular science to Marco Polo's roc bird". Anthropozoologica 54 (1): 111. doi:10.5252/anthropozoologica2019v54a12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0761-3032. https://sciencepress.mnhn.fr/en/periodiques/anthropozoologica/54/12.