தரவுகள் போதாது

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியல் ப்ரிவுகள்

தரவுகள் போதாது (Data Deficient-DD) இனங்கள் என்பது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் (ஐ.யூ.சி.என்) வகைப்படுத்தப்பட்டுள்ளது இனங்களில் ஒன்றாகும். இது பாதுகாப்புச் செய்யப்பட வேண்டிய இனத்திற்கானகாப்பு நிலையை முறையாக மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லை என்பதாகும். இதில் உள்ள இனங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படவில்லை என்பதை இது குறிக்கவில்லை; ஆனால் உயிரினங்களின் குறைவான அல்லது எந்த தகவலும் இந்த இனங்களின் செறிவு மற்றும் பரவல் குறித்துக் கிடைக்கவில்லை என்பதை இது குறிக்கிறது.

ஐயுசிஎன் “தரவுகள் போதாது” என இனங்களைப் பதிவு செய்யும்போது கவனமாகப் பதிவிட வேண்டுகிறது. "ஒரு இனத்தின் வரம்பு ஒப்பீட்டளவில் குறுகியதாக இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், கணிசமான காலம் கடந்துவிட்டால் அந்த இனத்தின் கடைசி பதிவின் அடிப்படையில், அச்சுறுத்தப்பட்ட நிலை நியாயப்படுத்தப்படலாம்" [1] (முன்னெச்சரிக்கை கொள்கையையும் காண்க).

மேற்கோள்கள்

தொகு
  1. "The Categories," in IUCN (1983).

வெளி இணைப்புகள்

தொகு
  • IUCN (2001). "2001 Categories & Criteria (version 3.1)". 2014 IUCN Red List. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுகள்_போதாது&oldid=3130680" இலிருந்து மீள்விக்கப்பட்டது