அச்சுறு நிலையை அண்மித்த இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT - Near Threatened) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். இவ்வினங்கள் அச்சுறுநிலையை அடைந்திராவிடினும், வெகு விரைவில் அப்படியான நிலையை எட்டக் கூடியதாக இருப்பதனால், தேவையான கால இடைவெளிகளில் இவற்றை மதிப்பீடு செய்து கவனித்துக் கொள்ளல் அவசியமாகும்.[1] [2] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம், தகுந்த கால இடைவெளியில் அச்சுறுத்தலுக்குள்ளான உயிரிலகு குழுக்களை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.
அச்சுறுத்தலுக்குள்ளான இனக்குழுவிற்குப் பயன்படுத்தப்படும் நம்பத்தகுந்த அல்லது கிட்டத்தட்ட சந்திக்கக்கூடிய, உயிரிகளின் எண்ணிக்கை குறைவு அல்லது வரம்பில் குறைவு போன்ற பாதிக்கப்படக்கூடிய அளவுகோல்களை உள்ளடக்கியது. 2001ஆம் ஆண்டு முதல் மதிப்பிடப்பட்ட அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முயற்சிகளைச் சார்ந்து இருக்கலாம்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் வகைப்பாட்டு வகைகள் மற்றும் அளவுகோல்கள் பதிப்பு 2.3
தொகு2001க்கு முன், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பதிப்பு 2.3 வகைகள் மற்றும் அளவுகோல்கள் பாதுகாப்பு நிலையை ஒதுக்க பயன்படுத்தியது, இதில் காப்பு சார்ந்த இனங்களுக்கான தனி வகை ("காப்பு சார்ந்து/தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்") அடங்கும். இந்த வகையுடன் அச்சுறு நிலையை அண்மித்த இனம் மற்றும் காப்பு சார்ந்த இனம் இரண்டும் "குறைந்த ஆபத்து" வகையின் துணைப்பிரிவுகளாகும். 2001ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைசியாக மதிப்பிடப்பட்ட உயிரலகு, இவற்றின் குறைந்த ஆபத்து/காப்பு சார்ந்தது அல்லது குறைந்த ஆபத்து/அச்சுறு நிலையை அண்மித்த இனம்நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இருப்பினும் இன்று இதே தகவலுடன் வகை ஒதுக்கப்பட்டிருந்தால், இனங்கள் "அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)" என்று குறிப்பிடப்படும்.
படங்கள்
தொகு-
அச்சுறு நிலையை அண்மித்த இனம் ஐரோப்பிய நீர்நாய்
-
வாழிட இழப்பிற்கு உள்ளான ஒநாய் வகை
-
சாம்பல் வெளவால், அழிவாய்ப்பு இனத்திலிருந்து மிக அருகிய இனம்[3]
-
அச்சுறு நிலையை அண்மித்த இனம் சமவெளி வரிக்குதிரை
-
பாலி மலைப்பாம்பு முன்னர் பொதுவான சிற்றினம், வேட்டையாடுதல் காரணமாக எண்ணிக்கை குறைந்து அச்சுறு நிலையை அண்மித்த இனமாக உள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ "What are The IUCN Red List Categories and Criteria?". IUCN Red List. IUCN. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
- ↑ "SUMMARY OF THE FIVE CRITERIA (A-E) USED TO EVALUATE IF A TAXON BELONGS IN AN IUCN RED LIST THREATENED CATEGORY (CRITICALLY ENDANGERED, ENDANGERED OR VULNERABLE)" (PDF). IUCN Red List. IUCN. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
- ↑ "Myotis grisescens status". IUCN Red List of Threatened Species (IUCN). 24 February 2017. https://www.iucnredlist.org/species/14132/22051652. பார்த்த நாள்: 2020-08-11.