காப்பு சார்ந்த இனம்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், காப்பு நிலையில், காப்பு சார்ந்த இனம் என்பது அச்சுறு நிலையை அடைந்து பின்னர் அற்றுவிட்ட இனமாகப் போவதைத் தடுப்பதற்காக, பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கான முயற்சிகளில் தங்கியிருக்கும், அல்லது சார்ந்திருக்கும் இனமாகும்.
சரியான பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை விசேடமான வாழிடங்களில் பாதுகாக்கப்படாவிடின் ஐந்து வருடங்களில் குறிப்பிட்ட இனமானது அச்சுறுத்தலுக்கு ஆட்பட நேரிடலாம்.