மலைப்பாம்பு

மலைப்பாம்பு
Python bivittatus тигровый питон.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: Squamata
துணைவரிசை: Serpentes
குடும்பம்: Pythonidae
பேரினம்: Python
Daudin, 1803
வேறு பெயர்கள்

இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன.[2]

புவியியல் எல்லைதொகு

ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும் மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் காணப்படுகின்றது.[1]

தமிழ் நாட்டில்/இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:

  1. மலைப்பாம்பு
  2. மண் மலைப்பாம்பு (அல்லது) அயகரம்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
  2. 2.0 2.1 "Python". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). 11 September 2007 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைப்பாம்பு&oldid=2698138" இருந்து மீள்விக்கப்பட்டது