தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும்.[1] மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. மனிதர் உட்பட எலி, தேனீ போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.

ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கோள்கள் தொகு