மண்ணுளிப் பாம்பு
மண்ணுளிப் பாம்பு Gongylophis conicus | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
Squamata |
துணைவரிசை: | பாம்புகள்
Serpentes |
குடும்பம்: | Boidae
|
துணைக்குடும்பம்: | Erycinae
|
பேரினம்: | Gongylophis
|
இனம்: | G. conicus
|
இருசொற் பெயரீடு | |
Gongylophis conicus (சினைடர், 1801) | |
வேறு பெயர்கள் [1] | |
|
மண்ணுளிப் பாம்பு[2] அயகரம்[3] (Gongylophis conicus) என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர்.
உடலளவு
தொகுஇந்த பாம்பின் நீளம் பிறக்கும் போது 12.5 செ. மீட்டராகவும், நன்கு வளர்ந்தபின் சுமாராக 50 செ. மீட்டராக இருக்கும். அதிக அளவாக 100 செ. மீட்டர் வரை இதனுடைய நீளம் இருக்கலாம்.
உடல் தோற்ற விளக்கம்
தொகு- சிறிய, தடித்த உடலுடையது.
- தலை மற்றும் வாலின் செதில்கள் அதிகளவு கீலுடையது [சில சமயங்களில் கணுக்களாகவும் இருப்பதுண்டு]
- சிறிய கண்ணும் செங்குத்தான கண்மணியும் உடையது.
- மிகச்சிறிய வாலுடையது.
நிறம்
தொகு- பல்வேறு நிறங்களையுடையது : செம்பழுப்பு, மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு அல்லது கருப்பு; சீரற்ற திட்டுகள் இப்பாம்பை கண்ணாடி விரியனைப்போல தோற்றமளிக்கச் செய்கின்றன.
- உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெண்ணிறம்.
இயல்பு/பழக்கவழக்கம்
தொகுஇவை மாலை நேரங்களிலும் சூரியன் மறையும் நேரத்திலும் இரவிலும் தீவிரமாக நடமாடக்கூடியது. இரையை நெரித்துக் கொல்லும் தன்மையுடையன. எலி, இந்தியப் பெருச்சாளி போன்ற கொறித்துண்ணிகளின் வளைகளில் அதிகளவு காணப்படும்.[4] பதுங்கியிருந்து தாக்கும் முறையைப் பின்பற்றி பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றையும் வேட்டையாடும்.
இனப்பெருக்கம்
தொகுஇவை குட்டிகளை ஈனும் வகையினைச் சார்ந்தவை. 6 முதல் 8 குட்டிகளை மே முதல் சூலை வரை காலத்தில் ஈனுகின்றன.[5]
பிற முக்கிய இயல்புகள்
தொகுதொந்தரவு தரப்பட்டால், உடலை உப்பச்செய்து விரியன் பாம்புகளைப் போல் இவை கொத்தும். ஆனால் இவற்றிற்கு நஞ்சு இல்லாததால் மாந்தருக்கும் பிற பெரிய விலங்குகளுக்கும் உயிரிழக்கும் வாய்ப்பு இல்லை.
பரவல்
தொகுஇவை இந்தியா முழுவதும் வடகிழக்கு, அந்தமான்-நிக்கோபார், இலச்சத்தீவுகள் நீங்கலாகவும், பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.[1]
உருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்
தொகு- சிறிய அயகரப்பாம்புகள் சுருட்டைப்பாம்புகளைப் போலவும், வளர்ந்தவை கண்ணாடி விரியன்களைப் போலவும் தோற்றம் அளிக்கின்றன.
இதனையும் காண்க
தொகுதகவல் உதவி
தொகுSnakes of India - The Field Guide -- இரோமுலசு விட்டேக்கர் மற்றும் அசோக் கேப்டன்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ "நல்ல பாம்பு 7: மண்ணுளியும் இருதலை மணியனும் ஒன்றா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Das (2002).
- ↑ சிற்றினம் Eryx conicus at The Reptile Database. Accessed 3 June 2019.