முதலை
முதலைகள் புதைப்படிவ காலம்:பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம் | |
---|---|
நைல் முதலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குரோகோடிலியா
|
குடும்பம்: | குரோகோடைலிடே குவியெர், 1807
|
பேரினம் | |
See full taxonomy. |
முதலை (Crocodile) ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது.
பெயர்கள்
தொகுமுதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன.[1] ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாக முதலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.[2]
உடலமைப்பு
தொகுஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.
உயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்
தொகுமுதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் ஆறு அல்லது குளம் போன்ற நன்நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் செரிமான சக்தி அபாரமானதாகும். இவற்றின் செரிமான உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போன்ற கடினமான பொருள்களையும் கூட கரைத்து செரிமானமாக்கிறது.
இயல் தோற்றம்
தொகுமுதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருத்து பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.
முதலை வகைகள்
தொகுபெரும்பாலான முதலைச் சிற்றினங்கள் குரோகோடைலசு பேரினத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள மற்ற பேரினங்கள், ஆசுடியோலேமசு (ஒற்றைச் சிற்றினப் பேரினம்) (அங்கீகரிக்கப்பட்டால், மெசிசுடாப்சு போல).
- குடும்பம் குரோகோடைலிடே
- துணைக்குடும்பம் †மெகோசூசினே (மெகோசூசின் குரோகோடிலேசு)(அழிந்து போனது)
- துணைக்குடும்பம் குரோகோடைலினே
- பேரினம் குரோகொடைலசு
- குரோகொடைலசு அக்குடசு, அமெரிக்க முதலை
- குரோகொடைலசு கேட்டாப்ராக்டசு, சன்ன மூக்கு முதலை (டி. என். ஏ. மற்றும் உருவவியல் (உயிரியல்) ஆய்வுகள் அடிப்படையில் இந்தச் சிற்றினம் "குரோகோடைலசு" பேரினத்தினை விட பைலோஜெனெடிக்சு அடித்தளமாக மெசிசுடோப்சு பேரினமாக இருக்கலாம்).[3]
- குரோகோடைலசு intermedius, ஓரினேகோ முதலை
- Crocodylus johnsoni, நன்னீர் முதலை அல்லது ஜொன்சுடன்சு முதலை
- குரோகோடைலசு mindorensis, பிலிப்பீன் முதலை
- குரோகோடைலசு moreletii, மெட்சிக்க முதலை அல்லது மோரலெட்சு முதலை
- குரோகோடைலசு niloticus, நைல் முதலை அல்லது ஆப்பிரிக்க முதலை (இதன் துணையினமான கருமுதலை மடகாஸ்கரில் காணப்படுகிறது)
- குரோகோடைலசு நோவாகுயினே, நியு கினி முதலை
- குரோகோடைலசு பாலூசுட்ரிசு, குளமுதலை[4]
- குரோகோடைலசு போரோசசு, உவர்நீர் முதலை [5]
- குரோகோடைலசு ரோம்பிபெர், கியூபா முதலை
- குரோகோடைலசு சியாமென்சிசு, சியாமி முதலை
- குரோகோடைலசு சச்கசு, மேற்கு ஆப்பிரிக்க முதலை அல்லது பாலைவன முதலை West African crocodile, desert or sacred crocodile
- பேரினம் ஆசுடியோலேமசு
- ஆசுடியோலேமசு டெட்ராசுபிசு, குட்டை முதலை
- பேரினம் †யூதேகோடான்
- பேரினம் †ரிமாசுசுசு (குரோகோடைலசு லாய்டி என்று முன்னார் அழைக்கப்பட்டது)
- பேரினம் †வோய் புரோச்சு, 2007 (குரோகோடைலசு ரோபசுடசு என்று முன்னர் அழைக்கப்பட்டது)
- பேரினம் குரோகொடைலசு
வாழ்வியல் நிலை
தொகுபெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.
அதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.
இதனையும் பார்க்கலாம்
தொகுகுறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. pp. 67, 180, 196, 315, 371, 388, 760, 805.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். pp. 217, 1359.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: date format (link) - ↑ McAliley, Willis, Ray, White, Brochu & Densmore (2006). Are crocodiles really monophyletic?—Evidence for subdivisions from sequence and morphological data. Molecular Phylogenetics and Evolution 39:16–32.
- ↑ http://www.environmentmin.gov.lk/web/images/pdf/red%20list%20book.pdf பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் 128 ஆம் பக்கம் 1 ஆம் வரி
- ↑ http://www.environmentmin.gov.lk/web/images/pdf/red%20list%20book.pdf பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் 128 ஆம் பக்கம் 2 ஆம் வரி