மைசூர்

இந்திய மாநிலமான கருநாடகவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்

மைசூரு, அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூரு மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூரு நகரமே பண்டைய மைசூரு இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.

மைசூரு
ಮೈಸೂರು (கன்னடம்)
எருமையூர்
மாநகரம்
மேலிருந்து கடிகார திசையில்: மைசூரு அரண்மனை; சிவசமுத்திரம் அருவி; இன்ஃபோசிஸ் மல்டிபிளக்ஸ்; மாண்டியாவில் பிருந்தாவன் தோட்டம்; சென்னகேசவா கோவில் சோமநாதபுரம்; லலித மகால்; புனித பிலோமினா தேவாலயம், மைசூரு மற்றும் சாமுண்டீஸ்வரி கோயில்.
மைசூரு is located in கருநாடகம்
மைசூரு
மைசூரு
மைசூரு is located in இந்தியா
மைசூரு
மைசூரு
இந்தியாவில் அமைவிடம்
மைசூரு is located in ஆசியா
மைசூரு
மைசூரு
ஆசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°18′31″N 76°39′11″E / 12.30861°N 76.65306°E / 12.30861; 76.65306
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கருநாடகம்
கோட்டம்மைசூரு கோட்டம்
மாவட்டம்மைசூரு மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மைசூரு மாநகராட்சி
 • மாநகர முதல்வர்சிவகுமார்[2] (பா.ச.க.)
 • துணை மாநகர முதல்வர்டாக்டர் ரூபா[2]
பரப்பளவு
 • மொத்தம்286.05 [3] km2 (110.5 sq mi)
ஏற்றம்770 m (2,503 ft)
மக்கள்தொகை (2022)
 • மொத்தம்1.26 மில்லியன்[1]
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்570 0xx
தொலைபேசி குறியீடு+91-(0)821-XXX-XXXX
வாகனப் பதிவுKA-09, KA-55
இணையதளம்www.mysurucity.mrc.gov.in/en
mysurucitycorporation.co.in

சங்கநூல் குறிப்புகள் தொகு

எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூரு நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)

தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)

இக்கால மைசூரு தொகு

மைசூரு அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூருவில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூரு மிருகக்காட்சிசாலை (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mysore, India Metro Area Population 1950-2022". பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  2. 2.0 2.1 "BJP Bags Mayoral Posts". 6 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  3. "Bruhat Mysuru Mahanagara Palike". 8 December 2020. Archived from the original on 2022-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்&oldid=3806446" இலிருந்து மீள்விக்கப்பட்டது