மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

இந்தியாவில் உள்ள உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ)(CSIR-Central Food Technological Research Institute), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆதரவின் கீழ் செயல்படும் ஆய்வு நிறுவனமாகும்.[1] இது 1950ஆம் ஆண்டு அக்டோபர் 21ம் நாளன்று இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் நிறுவப்பட்டது. சி.எஃப்.டி.ஆர்.ஐ தன் வள மையங்களை ஐதராபாத்து, இலக்னோ மற்றும் மும்பையில் நிறுவியுள்ளது. இந்நிறுவனம் உணவுத்தொழில் துறையில் ஈடுபடும் தொழில்முனைவோருக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.

ரயில் நிலையம் அருகே சி.எஃப்.டி.ஆர்.ஐ பிரதான வாயில்
சி.எஃப்.டி.ஆர்.ஐ மைசூர் எழில்மிகு தோற்றம்
மத்திய உணவு தொழில்நுட்ப நிலையம் (CSIR-Central Food Technological Research Institute)
Central Food Technological Research Institute front view.jpg
நிறுவப்பட்டது21 அக்டோபர் 1950 (1950-10-21)
ஆய்வு வகைஆய்வு நிறுவனம், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், இந்தியா
பணிப்பாளர்முனைவர் ஸ்ரீதேவி அன்னபூர்ண சிங்
அமைவிடம்மைசூர், கர்நாடகா
Campus200 ஏக்கர்கள் (0.81 km2)
Operating agencyஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
இணையதளம்www.cftri.com

சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ என்பது ஒரு பெரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வகமாகும். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் முனைவர் ஸ்ரீதேவி அன்னபூர்ண சிங். இந்நிறுவனத்தில் சுமார் 200 அறிவியல் அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களுடன் 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். உணவு பொறியியல், உணவு உயிரிதொழில்நுட்பம், நுண்ணுயிரியல், தானிய அறிவியல், உணர்வு அறிவியல், உயிர்வேதியியல், மூலக்கூறு ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை முத்ன்மையாகக் கொண்ட ஆய்வகங்கள் உட்பட பதினாறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள் உள்ளன.[2]

இந்த நிறுவனம் 300க்கும் மேற்பட்ட தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் உபகரண வகைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் பல காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு குறித்த செய்திகள் ஆய்வுக் கட்டுரைகள் புகழ்பெற்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. உலகின் உணவு தானியங்கள், பழம் மற்றும் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது உற்பத்தியாளர் எனும் பெருமையுடையது.[3] எனவே இந்நிறுவனம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மற்றும் மசாலா, பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் கோழி உற்பத்தி மற்றும் கையாளுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

இந்நிறுவனம் செயல்திறனை அதிகரிக்கவும் மற்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், கூடுதல் வசதி, ஏற்றுமதி அதிகரிப்பு, உணவுப் பொருட்களுக்கான புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்தல், மனித வளங்களை ஒருங்கிணைத்தல், உணவு தொழிலில் செலவுகள் குறைத்தல் மற்றும் புதுமையினைப் புகுத்த முனைப்புடன் செயல்படுகிறது.[4]

சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ 300க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. உபகரண வடிவமைப்புகள் உள்ளிட்ட செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் 4000க்கும் மேற்பட்ட உரிம தாரர்களுக்கு வணிக பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன. 

குறிப்புகள்தொகு

  1. "CSIR Lab Directory". 15 January 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "CFTRI - R & D Departments". 9 November 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Indian Agriculture". 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "CFTRI does its bit for tenth plan draft - The Times of India". http://articles.timesofindia.indiatimes.com/2002-01-31/bangalore/27123713_1_food-processing-food-safety-food-industry. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு

http://businessworld.in/article/We-Are-Changing-And-So-Is-Our-Food/28-12-2016-110384/