இறைச்சி
இறைச்சி (meat) என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் திசுக்களைக் குறிக்கும்.[1] விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் அனைத்துமுண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.[2][3][4]

உணவாற்றல் | 916 கிசூ (219 கலோரி) |
---|---|
0.00 g | |
12.56 g | |
நிறைவுற்றது | 3.500 g |
ஒற்றைநிறைவுறாதது | 4.930 g |
பல்நிறைவுறாதது | 2.740 g |
24.68 g | |
டிரிப்டோபான் | 0.276 g |
திரியோனின் | 1.020 g |
ஐசோலியூசின் | 1.233 g |
லியூசின் | 1.797 g |
லைசின் | 2.011 g |
மெத்தியோனின் | 0.657 g |
சிஸ்டைன் | 0.329 g |
பினைல்அலனின் | 0.959 g |
டைரோசின் | 0.796 g |
வாலின் | 1.199 g |
ஆர்ஜினின் | 1.545 g |
ஹிஸ்டிடின் | 0.726 g |
அலனைன் | 1.436 g |
அஸ்பார்டிக் அமிலம் | 2.200 g |
குளூட்டாமிக் காடி | 3.610 g |
கிளைசின் | 1.583 g |
புரோலின் | 1.190 g |
செரைன் | 0.870 g |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | (6%) 44 மைகி |
(13%) 0.667 மிகி | |
கனிமங்கள் | அளவு %திதே† |
இரும்பு | (9%) 1.16 மிகி |
சோடியம் | (4%) 67 மிகி |
நீர் | 63.93 g |
35 வீதமான எலும்புகளை விட்டு. | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
இறைச்சி என்பது நீர், புரதம், மற்றும் கொழுமிய மூலக்கூறுகளால் ஆனது. முன்பு இது பச்சையாக உண்ணக்கூடியதாக இருந்தாலும் பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் சமைத்த பின்னரோ அல்லது பதப்படுத்தியோ உண்ணப்படுகிறது. சமைக்கப்படாத இறைச்சியானது சில மணி நேரத்தில் கெட்டு அல்லது அழுகி விடும். சில நாட்களாயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இறைச்சியில் பெருகி அதை அழித்துவிடும்.
பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்புத் தசைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கொழுப்பு மற்றும் மற்ற தசைகளைக் குறிக்கும். ஆனாலும் உண்ணக்கூடிய எலும்பு சாராத ஊணுறுப்புகளையும் இச்சொல் குறிக்கிறது. பொதுவாக இறைச்சி என்ற சொல் பாலூட்டி வகை விலங்குகளின் (பன்றி, கால்நடை விலங்குகள், ஆடு) இறைச்சியை மனித இனம் நுகர்வுக்காக பயன்படுத்துவதை குறிப்பதாகக் கருதப்பட்டாலும் மீன், மற்ற கடல் உணவுகள், கோழியினங்கள் மற்றும் மற்ற விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்தே இறைச்சி என அழைக்கப்படுகிறது.[5][6]
வரலாறு
முந்தைய மனிதர்களின் உணவில் கணிசமான விகிதத்தை இறைச்சி கொண்டிருந்ததாக தொல்லுயிரியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.[1] பண்டைய வேட்டையாடிகள் மற்றும் இறைச்சி சேகரிப்பாளர்கள் அமைப்பு ரீதியான வேட்டையாடும் முறைகளைக் கொண்டு பெரிய விலங்குகளான காட்டெருது மற்றும் மான் போன்றவற்றை இறைச்சிக்காக நம்பியிருந்தனர்.[1]
பனியுகத்தின் கடைசிக்கட்டங்களில் (பொ.ஊ.மு. 10,000) விலங்குகளை மனித இனம் பழக்கப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட அமைப்பியல் ரீதியான இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் அவற்றைப் பெருக்குதல் போன்ற செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஆரம்பகால நாகரிகங்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த முறைகளே தற்பொழுதும் மனித இனம் இறைச்சிக்காக நம்பி இருக்கும் மூல ஆதாரமாகும்.
- மேற்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செம்மறியாடு, பொ.ஊ.மு. 8 ஆவது ஆயிரமாவது ஆண்டின் முற்பகுதியிலிருந்தே, குடியேறிய விவசாயத்தை நிறுவுவதற்கு முன்னர் நாய்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டிருந்தது.[1] பொ.ஊ.மு. 3500–3000 ஆண்டு வாக்கில் பழங்கால மெசொப்பொத்தேமியா மற்றும் எகிப்தில் பல்வேறு செம்மறி ஆட்டினங்கள் தோன்றின.[1] உலகில் தற்போது, 200 க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டினங்கள் உள்ளன.
- பொ.ஊ.மு. 5000 ஆண்டு வாக்கில் மெசொப்பொத்தேமியாவில் குடியேற்ற விவசாயம் தொடங்கியதற்குப் பின் கால்நடை வளர்ப்பு துவங்கியது.[1] பொ.ஊ.மு. 2500 பல்வேறு கால்நடை இனங்கள் தோன்றின.[1] தற்போதைய கால்நடை இனங்கள் அழிந்துவிட்ட ஐரோப்பிய கால்நடையான (Bos taurus (European cattle)) திமில் இல்லா இனம் மற்றும் இந்திய மாட்டினங்களின் (Bos taurus indicus (zebu)) வழிவந்தவைகளாகும்.[1] மாட்டிறைச்சி கால்நடைகளின் இனப்பெருக்கம், கால்நடை உற்பத்திக்காக கால்நடை வளர்ப்புக்கு ஏற்றதாக மாடுகள் உற்பத்தி அல்லது விலங்குகளின் பயன்பாட்டிற்காக கால்நடைகளை உற்பத்தி செய்வது, 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது.
- காட்டுப் பன்றிகளிலிருந்து வீட்டுப் பன்றிகள் தோன்றியதற்கான ஆதாரங்களை, நவீனகால ஹங்கேரியிலும், ரோய் நகரத்திலும் சுமார் பொ.ஊ.மு. 2500 எரிக்கோ மற்றும் எகிப்திலிருந்து வந்த மண்பாண்டங்களில் காட்டு பன்றிகளின் சித்திரங்கள் வெளிப்படுத்துகின்றன.[1] கிரேக்க-ரோமன் காலங்களில் பன்றி இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பன்றித் தொடை இறைச்சிகள் ஆகியவை வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன.[1] குறிப்பிட்ட இறைச்சி உற்பத்திக்காக மிகவும் பொருத்தமான இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், பன்றிகள் தீவிரமாக வளர்க்கப்படுகின்றன.[1]
இது தவிர பிற விலங்குகளும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன அல்லது வளர்க்கப்படுகின்றன. இறைச்சி நுகர்வானது கலாச்சாரம், பாரம்பரியம், விலங்குகளின் கிடைக்கக்கூடிய தன்மை போன்ற காரணிகளால் வேறுபடுகின்றன. மேலும் வருமானம் போன்ற காரணிகளும் இறைச்சி நுகர்வு நாட்டிற்கு நாடு வேறுபடுவதற்கான காரணிகளாக விளங்குகின்றன.[7]
- குதிரை இறைச்சி பொதுவாக பிரான்சு,[8] இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உணவாக உண்ணப்பட்டன.[9] குதிரை மற்றும் கலைமான் போன்ற பெரிய அளவிலான விலங்குகள் கடை பழங்காலத்தில் (late Paleolithic) மேற்கு ஐரோப்பாவில் வேட்டையாடப்பட்டன.[10]
- நாய் இறைச்சி சீனா,[11] தென் கொரியா,[12] மற்றும் வியட்நாம் [13] போன்ற நாடுகளில் உண்ணப்படுகின்றன. சில வேளைகளில் துருவப் பிரதேசங்களில் நாய் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.[14] வரலாற்று ரீதியாக ஹவாய்,[15] Japan,[16] ஜப்பான், சுவிச்சர்லாந்து,[17] மற்றும் மெக்சிக்கோ [18] உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பரவலாக உண்ணப்பட்டிருக்கின்றன.
- பூனை இறைச்சி தெற்கு சீனா, பெரு,[19] மற்றும் சில வேளைகளில் வட இத்தாலி போன்ற இடங்களில் உண்ணப்பட்டிருக்கின்றன.[20][21]
- அந்தீசு மலைத்தொடரில் கினியா பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன.[22]
ஜப்பான், அலாஸ்கா, சைபீரியா, கனடா, பரோயே தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, புனித வின்சென்ட்டு மற்றும் கிரெனடீன்கள் தீவு மற்றும் இந்தோனேசியாவில் உள்ள இரண்டு சிறிய சமூகங்கள் ஆகியவற்றில், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள், அவற்றின் ஒரு பகுதி சதைகளுக்காக வேட்டையாடுகின்றன.[23]
நுகர்வு
இறைச்சி நுகர்வு உலகளவில் மாறுபடுகிறது. மேலும் கலாச்சார அல்லது மத முன்னுரிமைகள், பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்தும் இறைச்சி நுகர்வு அளவுகள் மாறுபடுகிறது. பொருளாதார, சுற்றுச்சூழல், சமய அல்லது உடல்நலக் கூறுகள் காரணமாக சைவ உணவை உட்கொள்பவர்கள் போன்ற காரணிகள் இறைச்சி உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுகளின்படி, 1990 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெள்ளை மாமிசத்தின் ஒட்டுமொத்த நுகர்வு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கு 76.6% மற்றும் பன்றி இறைச்சி 19.7% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், மாறாக, மாட்டு இறைச்சி 1990 ல் 10.4 கிலோகிராமில் (23 பவுண்டு) இருந்து 2009 ஆம் ஆண்டில் 9.6 கிலோகிராம் (21 பவுண்டு) ஆக குறைந்துள்ளது.
ஆட்டிறைச்சி நுகர்வு
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு [24]
- சூடான் – 10.5 கிலோகிராம்கள் (23 lb) per capita
- கசக்கஸ்தான் – 8.1 கிலோகிராம்கள் (18 lb)
- ஆத்திரேலியா – 7.4 கிலோகிராம்கள் (16 lb)
- அல்ஜீரியா – 7.1 கிலோகிராம்கள் (16 lb)
- உருகுவை – 5.7 கிலோகிராம்கள் (13 lb)
- சவூதி அரேபியா – 5.5 கிலோகிராம்கள் (12 lb)
- நியூசிலாந்து – 4.4 கிலோகிராம்கள் (9.7 lb)
- துருக்கி – 4.1 கிலோகிராம்கள் (9.0 lb)
- ஈரான் – 3.2 கிலோகிராம்கள் (7.1 lb)
- தென்னாப்பிரிக்கா – 3.1 கிலோகிராம்கள் (6.8 lb)
பண்புகள்
எல்லா தசைத் திசுக்களும் புரதச் சத்து மிக்கவை. மேலும் இன்றியமையாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன. இத்திசுக்கள் குறைந்த காபோவைதறேற்றுக்களையே கொண்டுள்ளன. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தானது எந்த விலங்கின் இறைச்சி என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.
உற்பத்திகள்
மாட்டு இறைச்சி உற்பத்தி
நாடுகள் | 2008 | 2009 | 2010 | 2011 |
---|---|---|---|---|
ஆத்திரேலியா | 2132 | 2124 | 2630 | 2420 |
பிரேசில் | 9024 | 9395 | 9115 | 9030 |
சீனா | 5841 | 6060 | 6244 | 6182 |
செருமனி | 1199 | 1190 | 1205 | 1170 |
சப்பான் | 520 | 517 | 515 | 1000 |
ஐக்கிய அமெரிக்கா | 12163 | 11891 | 12046 | 11988 |
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Lawrie, R. A. (2006). Lawrie’s meat science (7th ed.). Cambridge: Woodhead Publishing Limited. ISBN 978-1-84569-159-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Advanced Human Nutrition. CRC Press. 2000. p. 37. ISBN 0-8493-8566-0. Retrieved October 6, 2013.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ Robert Mari Womack (2010). The Anthropology of Health and Healing. Rowman & Littlefield. p. 243. ISBN 0-7591-1044-1. Retrieved October 6, 2013.
- ↑ McArdle, John. "Humans are Omnivores". Vegetarian Resource Group. Retrieved October 6, 2013.
- ↑ "Meat definition and meaning | Collins English Dictionary". www.collinsdictionary.com (in ஆங்கிலம்). Retrieved 2017-06-16.
- ↑ "Definition of MEAT". www.merriam-webster.com (in ஆங்கிலம்). Retrieved 2017-06-16.
- ↑ Mark Gehlhar and William Coyle, "Global Food Consumption and Impacts on Trade Patterns" பரணிடப்பட்டது 2012-09-05 at the வந்தவழி இயந்திரம், Chapter 1 in Changing Structure of Global Food Consumption and Trade பரணிடப்பட்டது 2013-02-26 at the வந்தவழி இயந்திரம், edited by Anita Regmi, May 2001. USDA Economic Research Service.
- ↑ Chrisafis, Angelique "France's horsemeat lovers fear US ban The Guardian, June 15, 2007, London.
- ↑ Alan Davidson (2006). Tom Jaine, Jane Davidson and Helen Saberi. ed. The Oxford Companion to Food. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280681-5, pp. 387-388
- ↑ Turner, E. 2005. "Results of a recent analysis of horse remains dating to the Magdalenian period at Solutre, France," pp 70-89. In Mashkour, M (ed.). Equids in Time and Space. Oxford: Oxbow
- ↑ "BBC NEWS – Programmes – From Our Own Correspondent – China's taste for the exotic". bbc.co.uk.
- ↑ Podberscek, A. L. (2009). "Good to Pet and Eat: The Keeping and Consuming of Dogs and Cats in South Korea" (PDF). Journal of Social Issues 65 (3): 615–632. doi:10.1111/j.1540-4560.2009.01616.x இம் மூலத்தில் இருந்து July 19, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110719054520/http://www.animalsandsociety.org/assets/265_podberscek.pdf.
- ↑ "BBC NEWS – Asia-Pacific – Vietnam's dog meat tradition". bbc.co.uk.
- ↑ "Francis H. Fay (June 1960) "Carnivorous walrus and some arctic zoonoses". Arctic 13, no.2: 111-122". Archived from the original on 2011-07-06. Retrieved 2017-07-29.
- ↑ Schwabe, Calvin W. (1979). Unmentionable cuisine. University of Virginia Press. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8139-1162-5. https://books.google.com/books?id=SiBntk9jGmoC.
- ↑ Hanley, Susan B. (1999). Everyday things in premodern Japan: the hidden legacy of material culture. University of California Press. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-21812-4. https://books.google.com/?id=f7E5a9CIploC&pg=PA66&dq=dog#v=onepage&q=dog.
- ↑ Schwabe, Calvin W. (1979). Unmentionable cuisine. University of Virginia Press. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8139-1162-5. https://books.google.com/books?id=SiBntk9jGmoC.
- ↑ Alan Davidson (2006). Tom Jaine, Jane Davidson and Helen Saberi. ed. The Oxford Companion to Food. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280681-5, pp. 491
- ↑ "Carapulcra de gato y gato a la parrilla sirven en fiesta patronal". Cronica Viva. Archived from the original on November 17, 2010. Retrieved December 1, 2011.
- ↑ Jerry Hopkins (15 May 2004). Extreme Cuisine: The Weird and Wonderful Foods That People Eat. Tuttle Publishing. pp. 25–. ISBN 978-1-4629-0472-3.
- ↑ Jerry Hopkins (23 December 2014). Strange Foods. Tuttle Publishing. pp. 8–. ISBN 978-1-4629-1676-4.
- ↑ "A Guinea Pig for All Times and Seasons". The Economist. July 15, 2004. http://www.economist.com/node/2926169. பார்த்த நாள்: December 1, 2011.
- ↑ "WHALING IN LAMALERA-FLORES" (PDF). Retrieved April 10, 2013.
- ↑ Meat consumption, OECD Data. Retrieved 25 October 2016.