ஓங்கில்

நீர்வாழ் பாலூட்டி
(டால்பின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓங்கில்
Tursiops truncatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
வரிசை:
பற்திமிங்கிலம்
துணைக்குழுக்கள்

கடல் ஓங்கில்
ஆற்று ஓங்கில்

அமெரிக்க இராணுவப்பணியாளன்

ஓங்கில் அல்லது டால்பின் (ஆங்கிலம்: Dolphin) என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி சிற்றினம் ஆகும். இது திமிங்கலம் மற்றும் கடற்பன்றி ஆகியற்றுடன் நெருங்கிய உறவுமுறை கொண்டது. சுமார் நாற்பது வகையான ஓங்கில் சிற்றினங்கள் பதினேழு வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழை வடிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. இதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது[1]. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும் 40 கிலோகிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டவை. டால்பின்கள் ஊனுண்ணிகள். மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன[2]. உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.

பரிணாமம்

தொகு

ஓங்கில்கள் திமிங்கலங்களுக்கும் பாலூட்டிகளுக்கும் இடைப்பட்ட இனமாகும். கால்களில் இரட்டைப்படை விரல்கள் உடைய பாலூட்டிகளின் மூதாதையர் ஆகும். தற்கால டால்பின்களின் மூதாதையர்கள் இயோசீன் கேம் பகுதியில் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் நுழைந்தது. இதன் வால் அருகே சிறிய மூட்டு மொட்டுகள் (ஹிந்த் மூட்டு மொட்டுகள்) போன்ற கரு வளர்ச்சியின் ஐந்தாவது வாரத்தில் காணப்படும். இது தோராயமாக 2.5 செமீ (1.0) நீளமாக உள்ளது. நவீன டால்பின் எலும்புக்கூடுகளில் இரண்டு இடுப்பு எலும்பு பகுதியில் சிறிய கம்பி வடிவ பயனற்ற ஹிந்த் மூட்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. அக்டோபர் 2006 ல், ஒரு அசாதாரண குப்பி வடிவ மூக்குடைய டால்பின் ஜப்பானில் பிடிக்கப்பட்டது.

உடல்கூறு

தொகு

டால்பின்கள் வேகமாக நீச்சல் அடிக்கும் வண்ணம் நெறிப்படுத்தப்பட்ட நீள் வடிவ உடலைக் கொண்டிருக்கின்றன. வால் பிரிவில் உள்ள பெக்டோரல் துடுப்புகள் திசை கட்டுப்பாடு திறனையும் வால் துடுப்பு முற்செலுத்தும் திறனையும் கொண்டிருக்கும். நீந்தும் போது முதுகு துடுப்பு உறுதித்தன்மையை வழங்குகிறது. இனங்கள் வேறுபட்டவையாக இருப்பினும் பெரும்பாலும் கோடுகள் மற்றும் இணைப்புகளைக் கொண்டு சாம்பல் வண்ணத்தில் இருக்கும்.

சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும். ஓங்கில்கள் தங்கள் தலைக்கு மேல் உள்ள ஒரு உறிஞ்சும் துளை மூலம் மூச்சுவிடுகின்றன. அதன் மூச்சுக் குழல் மூளைக்கு முன்புறமாக உள்ளது. டால்பின் பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மூளையைக் கொண்டது.

பெரும்பாலான பாலூட்டிகள் போலன்றி, டால்பின்கள் அவை பிறப்பதற்கு முன்னர் அல்லது பின்னர் அலகு சுற்றியுள்ள ஒரு சில முடிகள் தவிர வேறு முடி ஏதும் இன்றி காணப்படும்.

டால்பின்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் உடலின் கீழ்புறமாக அமைந்துள்ளது. ஆண்களுக்கு மலத்துவாரத்தின் பின்னால் இரண்டு பிளவுகளுக்குள் ஆண்குறி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.பெண்ணுக்கு யோனி மற்றும் ஆசனவாய் பிளவுடன் ஒரு பிறப்புறுப்பு பிளவு உள்ளது. அமெரிக்க தேசிய கடல் பாலூட்டி அறக்கட்டளையின் ஒரு ஆய்வு டால்பின்கள், மனிதர்களை போலவே இரண்டாம் வகை நீரிழிவுக் குறைபாட்டை அடைகின்றன என கண்டறிந்தது. மனிதர்கள் மற்றும் டால்பின்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான நோய் மற்றும் சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுத்தது.

புலன்கள்

தொகு

பெரும்பாலான டால்பின்கள் நீரின் அடியில் மற்றும் வெளியே என இருபகுதியிலும் நல்ல கண்பார்வை கொண்டவை. இவற்றால் மனிதனை விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்களை கேட்க முடியும். நீருக்கு அடியில் ஒலியைக் கேட்பதற்காக, பிரத்யேகமாக அமைந்திருக்கும் கீழ் தாடை எலும்பு ஒரு கொழுப்பு நிறைந்த குழி வழியாக நடுச்செவி ஒலி கடத்துகிறது. டால்பின் பற்கள் எதிரொலியை உணர்ந்து ஒரு பொருளின் சரியான இடத்தை அறிவதாக நம்பப்படுகிறது. இந்திய சிந்து டால்பின் பார்வைக்குறைபாடு உடையது. அவை மீன் மற்றும் சில வகையான உணவுகளை கண்டறிய நுகர்வுத் திறனைப் பயன்படுத்துகின்றது.

2007, பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டு

தொகு

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.

துணுக்குகள்

தொகு
  • ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை.[2]

இந்திய தேசிய நீர் விலங்கு

தொகு
 
பெண் கடவுளான கங்கையின் ஊர்தி ஆன மாகாரா எனும் டால்ஃபின்

ஆற்று ஓங்கில் அக்டோபர் 5, 2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.[3][4]

வகைகள்

தொகு

இவை ஒர்டன்டரி துணை வகுப்பை சேர்ந்த பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய திமிங்கலங்கள் என வகை படுத்தப்படுகிறது. கடல் டால்பின்கள்,குடும்பம்:டெல்பிநிடே

  • பேரினம்:டெல்பினுஸ்

நீண்ட மூக்கு பொது டால்பின், குறுகிய மூக்கு பொது டால்பின்,

  • பேரினம்:டுர்சயொப்ஸ்

பொதுவான குப்பிமூக்கு டால்பின், இந்திய பசிபிக் குப்பிமூக்கு டால்பின், புர்றான் டால்பின் , டுர்சயொப்ஸ் ஆஸ்திரியளியஸ், செப்டம்பர் 2011 ல் மெல்போர்னில் கடலில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனங்கள் ஆகும்.

  • பேரினம்: லிச்சொதேல்பிஸ்,

வடக்கு திமிங்கில டால்பின், தெற்கு திமிங்கிலடால்பின்,

  • பேரினம்:சூசா

இந்திய பசிபிக் கூன்முதுகு டால்பின், சீன வெள்ளை டால்பின், அட்லாண்டிக் கூன்முதுகு டால்பின்,

  • பேரினம்: ஸ்டெல்லா,

அட்லாண்டிக் புள்ளி டால்பின், புள்ளிகளுடைய டால்பின், ஸ்பின்னர் டால்பின், கோடிட்ட டால்பின்,

  • பேரினம்: ஸ்டெனோ

கூரிய பற்களுடைய டால்பின்

  • பேரினம்: செப்ஹலோரிஞ்சுஸ்

சிலி டால்பின் ஹெக்டரின் டால்பின்

  • பேரினம்: திமிங்கிலம்

திமிங்கிலம் கிரீசியஸ்

  • பேரினம்: லெகநோதேல்ப்பிஸ்

ஃப்ராஸரின் டால்பின்

  • பேரினம்: லேகநோநோரிஞ்சுஸ்

அட்லாண்டிக் வெள்ளை தலை டால்பின், மங்கலான டால்பின், பசிபிக் வெள்ளை தலை டால்பின், பாலே நாட்டின் டால்பின், வெள்ளை மூக்கு டால்பின் ,

  • பேரினம்: ஒர்செல்லா

ஆஸ்திரேலிய டால்பின்

  • பேரினம்: பெபோநோசெப்லா

முலாம்பழம் , தலை திமிங்கிலம் ,

  • பேரினம்: ஆர்சினுஸ்

கொலையாளி திமிங்கிலம்,

  • பேரினம்: பெரிஷா

குள்ளர் கொலையாளி திமிங்கிலம்,

  • பேரினம்: சுடோர்கா

தவறான கொலையாளி திமிங்கிலம்,

  • பேரினம்: க்லோபிசெபெலா

நீண்ட விமானி திமிங்கிலம், குறுகிய விமானி திமிங்கிலம்,

  • பேரினம்: ஆஸ்ற்றோலோதேல்பிஸ்

ஆஸ்ற்றோலோதேல்பிஸ் மைருஸ்,

  • குடும்பம்: ப்லாடநிஷ்டியா

கங்கை நதி டால்பின், சிந்து நதி டால்பின்,

  • குடும்பம்: இனிடே

அமேசான் நதி டால்பின்,

  • குடும்பம்: லிப்போடைடி

சீன ஆற்று டால்பின் ,

  • குடும்பம்: போண்டோபோரிடே

லா பிளாட்டா டால்பின்,

இதன் ஆறு இனங்கள் பொதுவாக திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன முலாம்பழ தலை திமிங்கிலம், கொலையாளி திமிங்கிலம் , குள்ளர் கொலையாளி திமிங்கிலம் , ஹவாயில் கடல் வாழ்க்கை பூங்கா ,திமிங்கிலம் தவறான கொலையாளி திமிங்கிலம், நீண்ட விமானி திமிங்கிலம், குறுகிய விமானி திமிங்கிலம்,


இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ராஜன். கே. கே. 2007. கடல் வாழ் பாலூட்டிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-05-19. பார்க்கப்பட்ட நாள் 2007-05-10.
  3. http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&issueid=111&id=65014&Itemid=1&sectionid=114&secid=0
  4. http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/1006-govt-declares-dolphin-national-aquatic.html[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்கில்&oldid=3978477" இலிருந்து மீள்விக்கப்பட்டது