துடுப்புக்காலிகள்

(துடுப்புகாலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/துடுப்புகாலிகள்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

துடுப்புகாலிகள் (Pinniped)(/ˈpɪnɪˌpɛdz/) , எனும் கடல் பாலூட்டிகள், துடுப்புகள் போன்ற நான்கு கால்களை பயன்படுத்தி கடலில் நீந்தும் திறன் பெற்ற கடல் வாழ் விலங்கினங்களாகும்[2].[3] துடுப்புகாலிகள் சில நேரங்களில் கடற்கரையிலும் தவழ்ந்து வந்து ஓய்வெடுக்கும். துடுப்புகாலிகளில் 33 வகையான இனங்கள் உள்ளது. துடுப்புகாலிகள் அதிகம் வேட்டையாடப்படுவதால், இவ்வினம் அழிவின் விளிம்பில் உள்ளது.

துடுப்புகாலிகள்
புதைப்படிவ காலம்:OligoceneHolocene, 24–0 Ma
Clockwise from top left: கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை, பளுப்பு கடல்நாய் மற்றும் நீண்ட தந்தப்பல் பனிக்கடல் யானை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): துடுப்புகாலிகள்
Subgroups
வாழிடங்கள் (மஞ்சள் நிறம்)

வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளில் காணப்படும், ஊண் உண்ணிகளான துடுப்புகாலிகளை சீல், பனிக்கடல் யானை, கடல் சிங்கம் என மூன்று குடும்பமாக வகைப்படுத்தியுள்ளனர்.

இவைகளின் காது அமைப்பு வெளி நீட்டாது, முகத்தில் உட்பொதிந்து காணப்படும். இதன் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் ஓர் உருளை உருளுவதுபோல இருக்கும்.

துடுப்புகாலிகளில் பனிக்கடல் யானைகளுக்கு மட்டும் இரண்டு நீண்ட தந்தம் போன்ற பற்கள் உள்ளது. இப்பற்களால் இதன் எதிரிகளான பனிக்கரடி, சுறா மற்றும் திமிங்கிலங்களை விரட்டியடிக்கும். துடுப்புகாலிகளின் மேல் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது.

இதன் முக்கிய உணவு மீன், நண்டு மற்றும் மெல்லுடலிகள் ஆகும். துடுப்புகாலிகள் ஒரு மீட்டர் நீளம் முதல் 5 மீட்டர் நீளமும்; 45 கிலோ கிராம் முதல் 3200 கிலோ கிராம் எடையும் கொண்டது. துடுப்புக்காலிகளின் தோலுக்கடியில் அடர்த்தியான கொழுப்பு படிந்திருப்பதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது. துடுப்புகாலிகள் சிறந்த பார்வைத்திறனும், கேட்கும் திறனும் கொண்டவைகள்.

துடுப்புகாலிகளில் மூன்று பெருங் குடும்பங்கள் உள்ளது: 1 பனிக்கடல் யானை, 2 காதுள்ள சீல் மற்றும் 3 பாசிடோ எனும் கடல்சிங்கம் [4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Illiger, J. K. W. (1811). Prodromus Systematis Mammalium et Avium (in Latin). Sumptibus C. Salfeld. pp. 138–39.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. From Latin pinna, wing or fin, and ped-, foot.
  3. Elias, J. S. (2007). Science Terms Made Easy: A Lexicon of Scientific Words and Their Root Language Origins. Greenwood Publishing Group. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33896-0.
  4. Pinniped
  5. Jeff W Higdon, Olaf RP Bininda-Emonds, Robin MD Beck, and Steven H Ferguson (2007). "Phylogeny and divergence of the pinnipeds (Carnivora: Mammalia) assessed using a multigene dataset". BMC Evol Biol. 2007 7: 216. doi:10.1186/1471-2148-7-216. பப்மெட்:17996107. பப்மெட் சென்ட்ரல்:2245807. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pubmed&pubmedid=17996107. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pinnipedia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்புக்காலிகள்&oldid=3804226" இலிருந்து மீள்விக்கப்பட்டது