கடல் யானை
ஆண், பெண் கடல் யானைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பாசிடோ
பேரினம்:
Mirounga

John Edward Gray, 1827
துணைக் குடும்பங்கள்

வடக்கு கடல் யானைகள்
தெற்கு கடல் யானைகள்

கடல் யானைகள் (Elephant seals) துடுப்புகாலிகளில் முகத்தில் உட்பொதிந்த காதுகள் கொண்ட கடல்நாய் இனங்களில் ஒன்றாகும். கடல் வாழ் பாலூட்டிகளான கடல் யானைகளில் வடக்கு கடல் யானைகள் மற்றும் தெற்கு கடல் யானைகள் என இரண்டு வகைகள் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் பெரும்பாலான கடல் யானைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதால், தற்போது மிகச்சிறிய அளவில் மட்டும் காக்கப்பட்டு வருகிறது.

மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் காணப்படும் வடக்கு கடல் யானைகள், தென் துருவ தெற்கு கடல் யானைகளை விட உருவத்தில் சிறியது. தெற்கு கடல் யானைகள் நியூசிலாந்து, ஆப்பிரிக்கா, தெற்கு ஜார்ஜியா, சிலி மற்றும் அர்ஜெண்டைனாவின் தெற்கு கடற்கரைகளில் கூட்டமாக காணப்படுகிறது.[1] கடல் யானைகள் ஆண்டு தோறும் கடற்கரைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் குட்டி ஈன்கிறது.[2]

உடல் நீளமும், எடையும்

தொகு

துடுப்புகாலிகளில் கடல் யானை எடை மிகுந்தவைகள். தெற்கு கடல் யானைகள் 5 மீ (16 அடி) நீளமும்; 3,000 கிகி எடையும் கொண்டுள்ளது. வடக்கு கடல் யானைகள் 4.3 to 4.8 மீ (14 to 16 அடி) நீளமும்; 2,500 கிகி எடையும் கொண்டது.[3][4]

உடலியல்

தொகு
 
வடக்கு கடல் யானையின் மண்டையோடு

கடல் யானைகளில் 80% விழுக்காடு பெருங்கடல்களில் வாழ்கிறது. மற்ற கடல் வாழ் உயிரினங்களில் பெரிய நுரையீரல்கள் கொண்ட கடல் யானைகள் 100 நிமிடங்கள் வரை தொடர்ந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு கடலினுள்,[5][6] அதிக பட்சமாக கடலில் 1550 மீட்டர் ஆழத்தில் மூழ்கி இரையை வேட்டையாடும் திறன் கொண்டது.[5] (தெற்கு கடல் யானைகள் 2388 மீட்டர் ஆழத்தில் மூழ்கும் திறன் கொண்டது.[7] ஊனுண்ணியான இதன் முக்கிய இரைகள் பெரிய மீன்கள், மெல்லிடலிகள் மற்றும் சிறிய சுறா மீன்கள் ஆகும். கடலில் நன்கு நீந்தும் கடல் யானைகள், நிலத்திலும் நன்கு இயங்கும். கடல் யானைகளின் மேல் தோல் அரை அடி தடிமன் கொண்டது.

பெண் கடல் யானைக்காக போரிடம் ஆண் கடல் யானைகள் (காணொளி)

வாழ்நாள்

தொகு

வடக்கு கடல் யானைகளின் வாழ்நாள் 22 ஆண்டுகள். பிறந்த நான்கு அல்லது ஐந்து வயதிற்குள் பருவம் எய்திய பெண் கடல் யானைகள் குட்டி போடத் துவங்கிவிடும்.

தற்போதைய நிலை

தொகு

கடற்கரைகள் மற்றும் கடல் மாசுபடுவதால் கடல் யானைகளின் இனப்பெருக்கத்திற்கும், வாழ்வதற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது உலகில் 1,24,000 கடல் யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடல் பாலூட்டிகள் பாதுகாப்பு சட்டம், 1992இன் படி, கடல் பாலூட்டிகளை வேட்டையாடுவது, கொல்வது, பிடிப்பது மற்றும் கொடுமைப்படுத்துவது சட்டவிரோதமான செயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.[8]

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "WCS Chile > Especies > Elefantes marinos". programs.wcs.org. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
  2. http://www.plosgenetics.org/article/info:doi/10.1371/journal.pgen.1000554
  3. "Elephant Seals". Parks.ca.gov. 2007-05-23. பார்க்கப்பட்ட நாள் 2009-01-08.
  4. "Elephant Seal – MSN Encarta". Encarta.msn.com. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 Amos, Jonathan. "Elephant seals dive for science". 2006. BBC News. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.
  6. "Southern Elephant Seals of Sea Lion Island – A Long-term Research Project" (PDF). www.eleseal.org. பார்க்கப்பட்ட நாள் 2010-05-21.
  7. "Census of Marine Life – From the Edge of Darkness to the Black Abyss" (PDF). Coml.org. பார்க்கப்பட்ட நாள் 2009-12-15.
  8. "NOAA's National Marine Fisheries Service – Northern Elephant Seal (Mirounga angustirostris)".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mirounga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_யானை&oldid=3547485" இலிருந்து மீள்விக்கப்பட்டது