ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு


இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு மற்றும் விசாய அமைப்பென அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை (போஷாக்கை) அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை (விவசாய) மற்றும் உணவுப் பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பளிகள், உணவு, வீடுகள், சிறகவரை போன்றவற்றை தேவையானவர்களுக்கு இவ்வமைப்பினூடாக வழங்கியுள்ளன. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது "ரொட்டி (இலங்கைத் தமிழ்: பாண்) ஆவது இருக்கவேண்டும்" என்பதாகும்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
  • منظمة الأغذية والزراعة للأمم المتحدة(அரபு மொழி)
  • 联合国粮食及农业组织 (சீனம்)
  • Organisation des Nations Unies pour l'alimentation et l'agriculture (பிரெஞ்சு)
  • Продовольственная и сельскохозяйственная организация (உருசிய மொழியில்)
  • Organización de las Naciones Unidas para la Agricultura y la Alimentación (எசுப்பானியம்)
நிறுவப்பட்டது16 October 1945 in கியூபெக் நகரம், கனடா
வகைவிசேடத்துவ அமைப்பு
சட்டப்படி நிலைactive
தலைமையகம்உரோமை நகரம், இத்தாலி
இணையதளம்www.fao.org

1945 இல் இவ்வமைப்பானது கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. 11 ஏப்ரல் 2006 இல் 190 அங்கத்துவர்களைக் கொண்டுள்ளது (189 அங்கத்துவ நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும்). இந்த அமைப்பு துவங்குவதற்கான முதல் விதை 1971ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த ஐரோபிய வேளாண் மாநாட்டில் (European Confederation of Agricultire) கலந்துகொண்ட அறிஞர்களால் ஊன்றப்பட்டது.[1]

முதன்மை இலக்குகள் தொகு

  • வளர்ந்து வரும் நாடுகளிக்கான உதவிகளை அதிகரித்தல்
  • ஊட்டசத்து (போஷாக்கு), உணவு, விவசாயம், காடுகள், மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்
  • அரசுகளிற்கு ஆலோசனை வழங்குதல்
  • உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அது தொடர்பான பக்கம் சாராக் கொள்கைகளை உருவாக்குதல்

விசேட திட்டங்கள் தொகு

கரிபியன் கடற்கரையோரமாகக் காணப்பட்ட பழ ஈயினைக் கட்டுப்படுத்தியது. அத்துடன் இப்பகுதியில் காணப்பட்ட கால்நடைகளில் நோயை உருவாக்கிய ஒட்டிண்ணிகளை (Tick) அகற்றியது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு


  1. அழிவு: அணி நிழற் காடு