சிஸ்டைன் (Cystine) என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப் பொருளாகும். சிஸ்டைன், இரு புரத மூலகூறுகளுக்கு இடையிலேயும், ஒரு புரதத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.[1][2][3]

சிஸ்டைன்
இனங்காட்டிகள்
56-89-3 Y
ChEMBL ChEMBL366563 Y
ChemSpider 575 Y
InChI
  • InChI=1S/C6H12N2O4S2/c7-3(5(9)10)1-13-14-2-4(8)6(11)12/h3-4H,1-2,7-8H2,(H,9,10)(H,11,12) Y
    Key: LEVWYRKDKASIDU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12N2O4S2/c7-3(5(9)10)1-13-14-2-4(8)6(11)12/h3-4H,1-2,7-8H2,(H,9,10)(H,11,12)
    Key: LEVWYRKDKASIDU-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01420 Y
  • C(C(C(=O)O)N)SSCC(C(=O)O)N
UNII 48TCX9A1VT Y
பண்புகள்
C6H12N2O4S2
வாய்ப்பாட்டு எடை 240.29 g·mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட சிஸ்டீன் அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதிப் பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.

வேதி வினை: (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR

மேற்கோள்கள்

தொகு
  1. Nelson, D. L.; Cox, M. M. (2000) Lehninger, Principles of Biochemistry. 3rd Ed. Worth Publishing: New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57259-153-6.
  2. "cystine". Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. 27 July 2007
  3. Gortner, R. A.; Hoffman, W. F. (1925). "l-Cystine". Organic Syntheses 5: 39. http://www.orgsyn.org/demo.aspx?prep=10.15227/orgsyn.005.0039. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்டைன்&oldid=4163169" இலிருந்து மீள்விக்கப்பட்டது