சவூதி அரேபியா
சவூதி அரேபியா[a] மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபிய இராச்சியம்[b] என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் நடுவில் இது அமைந்துள்ளது. வளைகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை இது ஆக்கிரமித்துள்ளது. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 21,50,000 சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்நாட்டை ஆசியாவில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும், மத்திய கிழக்கில் இருப்பதிலேயே மிகப் பெரிய நாடாகவும், மற்றும் உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடாகவும் ஆக்குகிறது.[2] இந்நாட்டின் மேற்கே செங்கடலும், வடக்கே ஜோர்தான், ஈராக்கு, மற்றும் குவைத்தும், கிழக்கே பாரசீக வளைகுடா, பகுரைன்,[3] கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும், தென் கிழக்கே ஓமானும், தெற்கே யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் வட மேற்கே அமைந்துள்ள அக்காபா வளைகுடாவானது சவூதி அரேபியாவை எகிப்து மற்றும் இசுரேலிலிருந்து பிரிக்கிறது. செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகிய இரு கடல்களின் கடற்கரையையும் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா தான். இந்நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி வறண்ட பாலைவனம், தாழ்நிலப் பகுதி, புல்வெளி மற்றும் மலைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் ரியாத் ஆகும். ஜித்தா மற்றும் இசுலாமின் இரு மிகப் புனிதமான நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளிட்டவை பிற முக்கியமான நகரங்களில் உள்ளடங்கியவையாகும். இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3.22 கோடியாகும். அரபு உலகத்தில் சவூதி அரேபியா நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
சவுதி அரேபிய இராச்சியம் المملكة العربية السعودية அல்-மம்லக்கா அல்-அரபிய்யா அஸ்-ஸுவுதிய்யா | |
---|---|
குறிக்கோள்: "أشهد أن لا إله إلاَّ الله و أشهد أن محمد رسول ال" அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை; முகம்மது அவனின் தூதர் | |
நாட்டுப்பண்: السلام الملكي (இசைக்கருவியில்) "சவுதி அரேபிய நாட்டுப்பண்" "The Royal Salute" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ரியாத் |
ஆட்சி மொழி(கள்) | அரபு மொழி |
மக்கள் | சவுதி, சவுதி அரேபியர் |
அரசாங்கம் | முழு இராச்சியம் |
• அரசர் | சல்மான் பின் அப்துல் அசீஸ் |
• இளவரசர் | முகம்மது பின் நய்ஃப் |
முகம்மது பின் சல்மான் | |
தோற்றம் | |
• இராச்சியம் கூற்றம் | ஜனவரி 8, 1926 |
• திட்டப்படம் | மே 20, 1927 |
• ஒன்றியம் | செப்டம்பர் 23, 1932 |
பரப்பு | |
• மொத்தம் | 2,149,690 km2 (830,000 sq mi) (14வது) |
• நீர் (%) | குறைச்சல் |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 34,218,000[1] (40வது) |
• அடர்த்தி | 15/km2 (38.8/sq mi) (174வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.87 ட்ரில்லியன் (17வது) |
• தலைவிகிதம் | $51,600 (27வது) |
மமேசு (2019) | 0.854 Error: Invalid HDI value · 56 |
நாணயம் | ரியால் (SAR) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (AST) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (இல்லை) |
அழைப்புக்குறி | 966 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SA |
இணையக் குறி | .sa, السعودية. |
|
நவீன கால சவூதி அரேபியாவை உள்ளடக்கிய நிலப்பரப்பான இசுலாமுக்கு முந்தைய அரேபியாவானது பல பண்டைக் காலப் பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களின் தளமாகும். ஆப்பிரிக்காவுக்கு வெளியில் சில தொடக்க கால மனிதச் செயல்பாடுகளின் தடங்களை வரலாற்றுக்கு முந்தைய சவூதி அரேபியாவானது காண்பிக்கிறது.[4] உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமயமான இசுலாம் தற்போதைய சவூதி அரேபியா என்று அழைக்கப்படும் பகுதியில் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகியது.[5] இசுலாமிய இறை தூதர் முகம்மது நபி அரபுத் தீபகற்பத்தின் மக்களை ஒன்றிணைத்தார். ஓர் ஒற்றை இசுலாமிய சமய அரசியல் அமைப்பை உருவாக்கினார். பொ. ஊ. 632இல் இவரது இறப்பைத் தொடர்ந்து இவரைப் பின்பற்றியவர்கள் முசுலிம் ஆட்சியை அரேபியாவைத் தாண்டி விரிவாக்கினர். வடக்கு ஆப்பிரிக்கா, நடு, தெற்கு ஆசியா மற்றும் ஐபீரியா ஆகிய நிலப்பரப்புகளை தசாப்தங்களுக்குள்ளாகவே வென்றனர்.[6][7][8] நவீன கால சவூதி அரேபியாவில் இருந்து தோன்றிய அரபு அரசமரபுகள் ரசிதுன் (632–661), உமையா (661–750), அப்பாசிய (750–1517), மற்றும் பாத்திமா (909–1171) கலீபகங்களையும், மேலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏராளமான பிற அரசமரபுகளையும் தோற்றுவித்தன.
சவூதி அரேபியா இராச்சியமானது 1932ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அசீசால் நிறுவப்பட்டது. இவர் அப்துல்லா பின் அப்துல் அசீசு என்றும் கூட அறியப்படுகிறார். இவர் ஹெஜாஸ், நஜது, பகுதிகள், கிழக்கு அரேபியாவின் (அல் அக்சா) பகுதிகள் மற்றும் தெற்கு அரேபியா (அசீர்) ஆகியவற்றை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மூலம் ஓர் ஒற்றை அரசாக மாற்றினார். இவரது படையெடுப்புகள் 1902ஆம் ஆண்டு ரியாத்தைக் கைப்பற்றியதிலிருந்து தொடங்கின. ரியாத்தே இவரது சவூத் குடும்பத்தின் பூர்வீக இடமாகும். அன்றிலிருந்து சவூதி அரேபியா ஓர் ஒட்டு மொத்த முடியரசாக, பொது மக்களின் உள்ளீடு இன்றி, தாங்களாகவே முடிவெடுக்கும் உரிமையைப் பிறருக்கு அளிக்காத, முறையாகத் தேர்ந்தெடுக்கப் படாத அரசாங்கத்தை அமைத்துள்ளது.[9] இதன் அடிப்படைச் சட்டத்தில் சவூதி அரேபியா தன்னைத் தானே ஓர் இறையாண்மையுள்ள அரபு இசுலாமிய அரசு என்றும், அதன் அதிகாரப்பூர் சமயம் இசுலாம் என்றும், அதிகாரப்பூர்வ மொழி அரபு மொழி என்றும் வரையறுத்துள்ளது.[10][11] ஏமன் உள்நாட்டுப் போரில் இதன் தலையீடு, பரவலான மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு கொள்கைகளுக்காக சவூதி அரசாங்கமானது விமர்சனத்தை ஈர்த்துள்ளது.[12][13]
சவூதி அரேபியா ஒரு பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாகக் கருதப்படுகிறது.[14][15] 1938இல் இந்நாட்டில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து[16][17] இராச்சியமானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும், முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் உருவாகியுள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வளங்களையும், ஆறாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.[18] சவூதி அரேபியா உலக வங்கியால் ஒரு அதிக வருமானப் பொருளாதாரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி-20 முக்கியமான பொருளாதாரங்களில் உள்ள ஒரே ஒரு அரபு நாடு இதுவாகும்.[19][20] சவூதி அரேபியாவின் பொருளாதாரமானது மத்திய கிழக்கிலேயே மிகப் பெரியதாகவும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகிலேயே 19ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி 17ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் சவூதி அரேபியா அதிக உயர் தரத்தைக் கொண்டுள்ளது.[21] இலவசப் பயிற்சியுடைய பல்கலைக்கழகக் கல்வி, தனி நபர் வருமான வரி இல்லாத நிலை[22] மற்றும் அனைவருக்குமான இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை சவூதி அரேபியா வழங்குகிறது. அயல் நாட்டுப் பணியாளர்கள் மீதான இதன் சார்பின் காரணமாக சவூதி அரேபியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய குடியேற்ற மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியர்கள் உலகின் மிக இளம் வயதுடைய மக்களில் ஒருவராக உள்ளனர். மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் 25 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக உள்ளனர்.[23][24] வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு நாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஓப்பெக் ஆகியவற்றில் செயல்பாட்டிலுள்ள மற்றும் தொடக்கக் கால உறுப்பினராக சவூதி அரேபியா திகழ்கிறது. மேலும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு பேச்சுவார்த்தைப் பங்கெடுப்பாளராகவும் உள்ளது.
பெயர்க் காரணம்
தொகுஹெஜாஸ் மற்றும் நஜது இராச்சியத்தின் ஒன்றிணைப்பைத் தொடர்ந்து அப்துல் அசீசு பின் சவூத் 23 செப்டம்பர் 1932 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டார். புதிய அரசுக்கு அல்-மம்லக்கா அல்-அரபிய்யா அஸ்-சுவுதிய்யா (அரபு மொழி المملكة العربية السعودية ) என்று பெயரிட்டார். இது பொதுவாக "சவூதி அரேபிய இராச்சியம்" என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.[25] ஆனால், இலக்கிய ரீதியாக இதன் பொருளானது "சவூதி அரபு இராச்சியம்"[26] அல்லது "அரேபியாவின் சவூதி இராச்சியம்" (ஜோர்தானை ஒப்பிடுக) ஆகும்.
"சவூதி" என்ற சொல்லானது இந்நாட்டின் அரபுப் பெயரான அஸ்-சுவுதிய்யா என்ற ஆக்கக்கூறில் இருந்து தருவிக்கப்பட்டதாகும். ஒரு நிசுபா என்று அறியப்படும் பெயரடையின் ஒரு வகை இதுவாகும். இது சவூதி அரச குடும்பத்தின் அரசமரபுப் பெயரான அல் சவூதிலிருந்து (அரபு மொழி آل سعود) உருவாக்கப்பட்டது. இதன் சேர்ப்பானது நாடானது அரச குடும்பத்தின் தனியுடைமை என்ற பார்வையை வெளிப்படுத்துகிறது.[27][28] அல் சவூத் என்பது ஓர் அரேபியப் பெயர் ஆகும். "இவரின் குடும்பம்" என்ற பெயருடைய அல் என்ற வார்த்தையைச் சேர்த்ததன் மூலம் இது வருகிறது.[29] இதனுடன் முன்னோரின் தனி நபர் பெயரான சவூத் சேர்க்கப்பட்டுள்ளது. அல் சவூத் என்ற பெயரில் 18ஆம் நூற்றாண்டில் இந்த அரசமரபைத் தோற்றுவித்த முகம்மது பின் சவூதின் தந்தையான சவூத் இப்னு முகம்மது இப்னு முக்ரினின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.[30]
வரலாறு
தொகுநூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளால் இந்த நாடு உருவானது.
1902 இல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது சொந்த நகரம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932 இல் தற்போதைய சவுதி அரேபியா உருவனது. நாட்டின் தலைநகராக ரியாத் ஆனது. ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தந்துவரும், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.[31]
சவூதி அரேபிய மன்னர்கள்
தொகு- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்
- மன்னர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- மன்னர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- மன்னர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- மன்னர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- மன்னர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- மன்னர் சல்மான்-- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
சவூதி அரேபிய மூத்த இளவரசர்கள்
தொகு- இளவரசர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் சுல்த்தான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் நாயிப் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
- இளவரசர் சல்மான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
புவியியல்
தொகுசவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டன.[32]. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ²[33] (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.
சவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 அடி) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை ஒட்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர, மக்கள் குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை. எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது. செங்கடல் பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.
கலாச்சாரம்
தொகுகலாச்சார அரேபிய உடைகள்
தொகுஆண்கள்
தொகு- தோப் : நன்றாக தாராளமாக உள்ள, நீண்ட கைகளை உடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிற பருத்தி துணியிலும், குளிர்காலத்தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool) அணியப்படும்.
- தகியா : வெள்ளைத் தொப்பி.
- குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரிலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படும்.
அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.
பெண்கள்
தொகு- தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.
- அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.
- போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.
சட்ட அமைப்பு
தொகுசட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது [34]. இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால், இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது [34]. மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன [35] .
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "CIA - The World Factbook - Saudi Arabia". Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
- ↑ Saudi Arabia has a total area of 829,995 square miles and ranks 13th in the world according to the list of the total areas of the world's countries, dependencies, and territories, but since Greenland is a territory, this makes is the 12th largest country (https://www.britannica.com/topic/list-of-the-total-areas-of-the-worlds-countries-dependencies-and-territories-2130540).
- ↑ Through a maritime border marked by an artificial island.
- ↑ "88,000-Year-Old Finger Bone Pushes Back Human Migration Dates". National Geographic.
- ↑ "The Global Religious Landscape". Pew Forum. 18 December 2012. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Abbas
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Reichl
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Barber
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Alhussein, Eman (2023), "Saudi Arabias centralized political structure: prospects and challenges", Handbook of Middle East Politics, Edward Elgar Publishing, pp. 144–157, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-80220-563-3
- ↑ Tripp, Culture Shock, 2003: p. 14
- ↑ Malbouisson, p. 23
- ↑ "Saudi Arabia has carried out 800 executions since 2015, says rights group". Independent.co.uk. 15 April 2020. Archived from the original on 21 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
- ↑ "Death Penalty Worldwide". Archived from the original on 16 June 2019.
- ↑ Buzan, Barry (2004). The United States and the Great Powers. Cambridge: Polity Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7456-3375-6.
- ↑ "The erosion of Saudi Arabia's image among its neighbours". Middle East Monitor. 7 November 2013. Archived from the original on 9 November 2013.
- ↑ Caryl, Sue (20 February 2014). "1938: Oil Discovered in Saudi Arabia". National Geographic. National Geographic Society. Archived from the original on 12 December 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
- ↑ Learsy, Raymond (2011). Oil and Finance: The Epic Corruption. p. 89.
- ↑ "International – U.S. Energy Information Administration (EIA)". eia.gov. Archived from the original on 7 May 2015. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
- ↑ Wynbrandt, James (2004). A Brief History of Saudi Arabia. Infobase Publishing. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0830-8. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015.
- ↑ Soldatkin, Vladimir; Astrasheuskaya, Nastassia (9 November 2011). "Saudi Arabia to overtake Russia as top oil producer-IEA". Reuters இம் மூலத்தில் இருந்து 18 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221018144332/https://www.reuters.com/article/russia-energy-iea-idUSL6E7M93XT20111109.
- ↑ Human Development Report 2014 (PDF). United Nations. 2013. p. 159. Archived (PDF) from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ "Tax in Saudi Arabia | Saudi Arabia Tax Guide – HSBC Expat". www.expat.hsbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 17 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
- ↑ "بوابة الهيئة - الصفحة الرئيسية". portal.saudicensus.sa (in அரபிக்). Archived from the original on 3 October 2023. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
- ↑ "Why Saudi Arabia". Invest Saudi. Archived from the original on 13 February 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
- ↑ "Background Note: Saudi Arabia". U.S. State Department. Archived from the original on 9 June 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ Lewis, Bernard (2003). The Crisis of Islam. Modern Library. pp. xx. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-64281-7.
- ↑ Wilson, Peter W.; Graham, Douglas (1994). Saudi Arabia: the coming storm. M.E. Sharpe. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56324-394-3. Archived from the original on 28 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ Kamrava, Mehran (2011). The Modern Middle East: A Political History Since the First World War. University of California Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-26774-9. Archived from the original on 28 March 2024. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ Wynbrandt, James; Gerges, Fawaz A. (2010). A Brief History of Saudi Arabia. Infobase. p. xvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7876-9.
- ↑ Hariri-Rifai, Wahbi; Hariri-Rifai, Mokhless (1990). The heritage of the Kingdom of Saudi Arabia. GDG Exhibits Trust. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9624483-0-0.
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (6 சூலை 2016). "நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
- ↑ Yemen, Saudi Arabia sign border deal
- ↑ "CIA World Factbook - Rank Order:area_km2". Archived from the original on 2014-02-09. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
- ↑ 34.0 34.1 [ Campbell, Christian (2007). Legal Aspects of Doing Business in the Middle East. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4303-1914-6. Retrieved 7 June 2011.]
- ↑ ["History of Arabia". Encyclopaedia Britannica Online. Retrieved 7 June 2011.]
வெளி இணைப்புகள்
தொகு- சவூதி அரேபியா செய்தி விளம்பரத் துறை பரணிடப்பட்டது 2021-08-30 at the வந்தவழி இயந்திரம்
- சவூதி அரேபியா பரணிடப்பட்டது 2018-08-30 at the வந்தவழி இயந்திரம்
- சவூதி அரேபியாவின் இணைய செய்த்தித்தளங்ள்