பாத்திம கலீபகம்
பாத்திம கலீபகம் (Fatimid Caliphate, அரபி:الفاطميون) எகிப்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட இசுலாமிய கலீபகம் ஆகும். பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்ட கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற ஒரே சியா இசுலாமிய கலீபகம் இது. கிபி 909ல் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த அப்துல்லா அல் மகதி பில்லா என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் பேரிலேயே இது பாத்திம கலீபகம் என அழைக்கப்படுகின்றது. இதன் கலீபாக்கள் சியா இசுலாமின் இசுமாயிலி பிரிவின் இமாமாகவும் இருந்தனர். இவர்களின் ஆட்சி அதன் உட்சத்தில் வட ஆப்பிரிக்கா, எகிப்து, சிசிலி, சிரியா, பாலசுத்தீனம், லெபனான் மற்றும் கெசாசு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1070 வாக்கில் துருக்கிய மற்றும் சிலுவைப்போராளிகளின் படையெடுப்பால் சரிவை சந்திக்கத் தொடங்கிய இந்த பேரரசு, 1171ல் அய்யூப்பிய வம்ச பேரரசர், சலாகுத்தீன் எகிப்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது[1].
பாத்திம இசுலாமிய கலீபகம் الدولة الفاطمية அல்-பாத்திமியூன் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 909–கிபி 1171 | |||||||||||
கொடி | |||||||||||
தலைநகரம் | மகுதியா (909-969) கெய்ரோ (969-1171) | ||||||||||
சமயம் | சியா இசுலாம், இஸ்மாயிலி பிரிவு | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
கலீபா | |||||||||||
• 909-934 | அப்துல்லா அல்-மகதி பில்லா | ||||||||||
• 1160-1171 | அல்-அகித் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 5 சனவரி கிபி 909 | ||||||||||
• கெய்ரோ நிர்னயம் | ஆகத்து 8, 969 | ||||||||||
• முடிவு | கிபி 1171 | ||||||||||
பரப்பு | |||||||||||
969 | 5,100,000 km2 (2,000,000 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• | 62000000 | ||||||||||
நாணயம் | தினார் | ||||||||||
|
இன்றைய எகிப்தின் தலைநகரமான கெய்ரோ, இவர்களின் ஆட்சியிலேயே நிர்மானிக்கப்பட்டது. கிபி 969ல் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தின் அப்போதைய பெயர் அல்-காகிரா என்பதாகும்[2]. இன்றும் இந்த நகரத்தில் இருக்கும் அல்-அசார் பல்கலைக்கழகம், அல்-கக்கீம் பள்ளிவாசல் போன்றவை பாத்திம கலீபகத்தின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Amin Maalouf (1984). The Crusades Through Arab Eyes. Al Saqi Books. pp. 160–170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8052-0898-4.
- ↑ Beeson, Irene (September/October 1969). "Cairo, a Millennial". Saudi Aramco World: 24, 26–30. http://www.saudiaramcoworld.com/issue/196905/cairo-a.millennial.htm. பார்த்த நாள்: 2007-08-09.