ஜி-20

நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கொண்ட குழு

[1]

20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு
சுருக்கம்ஜி-20 (G-21+)
உருவாக்கம்1998
நோக்கம்உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.
உறுப்பினர்கள்
 அர்கெந்தீனா
 ஆத்திரேலியா
 பிரேசில்
 சீனா
 பிரான்சு
 செருமனி
 இந்தியா
 இத்தாலி
 இந்தோனேசியா
 சப்பான்
 தென் கொரியா

 கனடா
 மெக்சிக்கோ
 உருசியா
 சவூதி அரேபியா
 துருக்கி
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 எசுப்பானியா
 தென்னாப்பிரிக்கா
 ஐரோப்பிய ஒன்றியம்
ஜி-20 தலைமை
டோனி அபோட் (ஆத்திரேலியா) (2014)
பணிக்குழாம்
எவருமில்லை
வலைத்தளம்http://www.g20.org/

20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.

அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு

கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா

ஜி-20 உச்சிமாநாடுகள் தொகு

ஆண்டு # நாள் நாடு இடம் நடத்திய தலைவர் குறிப்பு
2008 1 14–15 நவம்பர்   அமெரிக்க ஐக்கிய நாடு வாசிங்டன் ஜார்ஜ் வாக்கர் புஷ் [2]
2009 2 2 எப்ரல்   ஐக்கிய இராச்சியம் லண்டன் கார்டன் பிரவுன் [2]
3 24–25 செப்டம்பர்   அமெரிக்க ஐக்கிய நாடு பிட்ஸ்பர்க் பராக் ஒபாமா [2]
2010 4 26–27 சூன்   கனடா டொரன்டொ சிடிபன் கார்பர் [3]
5 11–12 நவம்பர்   தென் கொரியா சியோல் லி முயுங்-பக் [4]
2011 6 3–4 நவம்பர்   பிரான்சு கேன்ஸ் நிக்கொலா சார்கோசி [5]
2012 7 18–19 சூன்   மெக்சிகொ லாஸ் கெபொஸ் பிலிப்பி கல்டிரொன் [6]
2013 8 5–6 செப்டம்பர்   உருசியா ஸ்ரீரில்னா, செய்ன்ட் பிட்டர்ஸ்பர்க் விளாதிமிர் பூட்டின் [7][8][9]
2014 9 15–16 நவம்பர்   ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் டோனி அபோட் [7][10]
2015 10 நவம்பர்   துருக்கி அன்டால்யா [7][11]
2016 11 நவம்பர்   சீனா [7][11]
2017 12 7-8 சூலை ஜெர்மனி ஹம்பேர்க் ஆஞ்செலா மெர்கல்
2018 13 30 நவம்பர் - 1 டிசம்பர் ஆர்ஜென்டீனா பியுனோஸ் எயர்ஸ் மொரிசியோ மக்ரி
2019 14 28-29 சூன் ஜப்பான் ஒசாக்கா சின்சோ அபே
2020 15 21–22 நவம்பர் சவூதி அரேபியா ரியாத் (கோவிட் பெருந்தொற்று காரணமாக இம்மாநாடு காணொளி மூலம் நடத்தப்பட்டது) சௌதி மன்னர் சல்மான் [12][13]
2021 16 30–31 அக்டோபர் இத்தாலி உரோம் மரியோ திராகி [14][15]
2022 17 15-16 நவம்பர் இந்தோனேசியா பாலி ஜோக்கோ விடோடோ [16][17][18]
2023 18 9–10 செப்டம்பர் 2023 இந்தியா புது தில்லி நரேந்திர மோதி

ஜி 20 (இந்தியா) தொகு

ஜி 20 உச்சி மாநாடு டில்லியில் நடைபெற்றது. 20 உறுப்பு நாடு, 9 விருந்தினர் நாடு, 14 உலகப் பெருந்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே பூமிக்குடும்பமாதல், உலகைப் பசுமையாக்குதல் முதலானவை இதன் நோக்கம்.[19] மாநாடு நிகழ்விடத்தின் முகப்பில் நடராசர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டமைப்பில் ஆசிய ஒன்றியம் இணைந்தது. இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுதல் பற்றிக் கருத்துக்கள் பறிமாறப்பட்டன.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "G20 Members". G20.org. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
 2. 2.0 2.1 2.2 The G-20 Leaders Summit on Financial Markets and the World Economy from the G-20 Information Centre at the University of Toronto
 3. Canada (25 September 2009). "Canada to host 'transition' summit in 2010". Toronto: Theglobeandmail.com இம் மூலத்தில் இருந்து 25 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120525110802/www.theglobeandmail.com/news/national/canada-to-host-transition-summit-in-2010/article1301423/. பார்த்த நாள்: 27 June 2010. 
 4. "Korea to Host G20 in November," Korea Times, 25 September 2009; retrieved 12 November 2010.
 5. "Cannes albergará próxima cumbre del G20 en noviembre de 2011," Agence France Presse. 12 November 2010.
 6. "Mexico to host G20 summit in 2012," Xinhua, 28 June 2010.
 7. 7.0 7.1 7.2 7.3 "Cannes Summit Final Declaration," பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம் G-20 Official Website, 4 November 2011.
 8. Saint Petersburg to hold G20 Summit of 2013 பரணிடப்பட்டது 2013-02-08 at the வந்தவழி இயந்திரம், Voice of Russia
 9. "Saint Petersburg to hold G20 Summit of 2013". strategic-culture.org. Archived from the original on 18 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. "No Cookies". couriermail.com.au. Archived from the original on 7 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
 11. 11.0 11.1 "G20 Leaders' Communiqué". whitehouse.gov. பார்க்கப்பட்ட நாள் 16 November 2014.
 12. "Saudi Arabia to host G-20 summit in 2020", Al Arabiya, 8 July 2017.
 13. "G20 final day of summit in Hamburg – live updates", Deutsche Welle, 8 July 2017.
 14. Chaudhury, Dipanjan Roy (2018-12-03). "Warmth in ties prompts Italy to let India host G20 Summit in 2022". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/warmth-in-ties-prompts-italy-to-let-india-host-g20-summit-in-2022/articleshow/66913607.cms. 
 15. "A Roma il primo G20 italiano". Eastwest (in இத்தாலியன்). 2020-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-05-02.
 16. "KTT G20 Bali: Jokowi Pagi Ini Sambut 17 Kepala Negara di Apurva Kempinski". Tempo.co (in இந்தோனேஷியன்). 2022-11-15. பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
 17. "India to host G20 summit in 2023 after Italy, Indonesia; Brazil to hold presidency in 2024". இந்தியா டுடே. 22 November 2020. https://www.indiatoday.in/india/story/india-to-host-g20-summit-in-2023-after-italy-indonesia-brazil-to-hold-presidency-in-2024-1743128-2020-11-23. 
 18. "Presiden Jokowi Tinjau Kesiapan GWK Cultural Park untuk KTT G20". Sekretariat Presiden Republik Indonesia (in இந்தோனேஷியன்). 2022-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
 19. தினமணி, நாளிதழ், 2023 செப்டம்பர் 9, 10, 11 ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளின் தொக்குப்பு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜி20
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி-20&oldid=3930418" இலிருந்து மீள்விக்கப்பட்டது