புது தில்லி

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் தலைநகர்.

புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی‎) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் பரப்பளவானது அரியானாவிலுள்ள பரீதாபாது, குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.

புது தில்லி
வலச்சுழியாக மேலிருந்து இடமாக: தலைமைச் செயலகக் கட்டிடம், கன்னாட்டு பிளேசு, சந்தர் மந்தர், ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் வாயில்
நாடு இந்தியா
மாநிலம்/ஆட்பகுதிதேசிய தலைநகர் பகுதி
நிறுவப்பட்டது1911
துவங்கப்பட்டது1931
பரப்பளவு
 • தலைநகரம்42.7 km2 (16.5 sq mi)
ஏற்றம்
216 m (709 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • தலைநகரம்2,49,998
 • அடர்த்தி5,855/km2 (15,160/sq mi)
 • பெருநகர்
2,17,53,486
இனம்தில்லியர்
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
 • இரண்டாம் அலுவல் மொழிஉருது, பஞ்சாபி[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின்குறி(கள்)
110xxx
இடக் குறியீடு+91-11
வாகனப் பதிவுDL-1x-x-xxxx to DL-14x-x-xxxx
நகராட்சி அமைப்புபுது தில்லி மாநகராட்சி மன்றம்
இணையதளம்www.ndmc.gov.in
தில்லியின் 11 மாவட்டங்கள்
புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்

ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.[4] இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு "புது தில்லி" என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[5] 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[6] புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[7]

புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது.[8] மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்,[9] நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது.[10] அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது.[11] இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது.[12] 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.[13]

வரலாறு

தொகு

புராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் (தில்லியின் பழைய பெயர்). இன்றைய தில்லியிலும் ஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது.[14]

தில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது.[15]

 
பத்தாம் நூற்றாண்டில், புது தில்லியை உருவாக்கிய ப்ரித்திவிராஜ சவுகான் நினைவு அருங்காட்சியத்தின் நடைபாதை.

நிறுவியது

தொகு

இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது.[16]

12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்.[17][18] மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள முடிசூட்டுப் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.[19][20] புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[21][22]

புவி அமைப்பு

தொகு

தில்லி பெருநகரப் பகுதியில், 42.7 சதுர கிலோமீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது[23]. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்[24]

மாவட்ட நிர்வாகம்

தொகு
மேலும் தகவல்களுக்கு: புது தில்லி மாநகராட்சி மன்றம்

புது தில்லி மாவட்டம் சாணக்கியபுரி, தில்லி கண்டோன்மெண்ட் மற்றும் வசந்த விகார் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. புது தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கன்னாட்டு பிளேசில் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 142,004 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -20.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 77,942 ஆண்களும்; 64,062 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4,057 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 88.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.24% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 83.56% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,760 ஆக உள்ளது.[25]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 124,482 (87.66%) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 8,480 (5.97%) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 2,933 (2.07%) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 679 (0.48%) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 4,852 (3.42%) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 312 (0.22%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

காலநிலை

தொகு

புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் 46 °C (115 °F)ம், குளிர் காலங்களில் 0 °C (32 °F)ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், புது தில்லி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.6
(83.5)
31.8
(89.2)
39.4
(102.9)
43.2
(109.8)
47.2
(117)
45.0
(113)
43.3
(109.9)
41.8
(107.2)
39.2
(102.6)
38.1
(100.6)
33.6
(92.5)
29.1
(84.4)
47.2
(117)
உயர் சராசரி °C (°F) 21.1
(70)
24.2
(75.6)
30.0
(86)
36.2
(97.2)
39.6
(103.3)
39.3
(102.7)
35.1
(95.2)
33.3
(91.9)
33.9
(93)
32.9
(91.2)
28.3
(82.9)
23.0
(73.4)
31.4
(88.5)
தாழ் சராசரி °C (°F) 7.3
(45.1)
10.1
(50.2)
15.4
(59.7)
21.5
(70.7)
25.9
(78.6)
28.3
(82.9)
26.6
(79.9)
25.9
(78.6)
24.4
(75.9)
19.5
(67.1)
12.8
(55)
8.2
(46.8)
18.8
(65.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.6
(30.9)
1.8
(35.2)
5.3
(41.5)
12.9
(55.2)
15.5
(59.9)
19.9
(67.8)
20.1
(68.2)
21.2
(70.2)
17.3
(63.1)
12.8
(55)
6.8
(44.2)
1.3
(34.3)
−0.6
(30.9)
மழைப்பொழிவுmm (inches) 20.3
(0.799)
15.0
(0.591)
15.8
(0.622)
6.7
(0.264)
17.5
(0.689)
54.9
(2.161)
231.5
(9.114)
258.7
(10.185)
127.8
(5.031)
36.3
(1.429)
5.0
(0.197)
7.8
(0.307)
797.3
(31.39)
ஈரப்பதம் 63 55 47 34 33 46 70 73 62 52 55 62 54.3
சராசரி மழை நாட்கள் (≥ 1.0mm) 1.7 1.3 1.2 0.9 1.4 3.6 10.0 11.3 5.4 1.6 0.1 0.6 39.1
சூரியஒளி நேரம் 213.9 217.5 238.7 261.0 263.5 198.0 167.4 176.7 219.0 269.7 246.0 217.0 2,688.4
Source #1: WMO,[26] NOAA (extremes and humidity, 1971–1990) [27]
Source #2: HKO (sun only, 1971–1990) [28]
 
1911 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.
 
1931 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Amanda Briney. "Geography of New Delhi". About.com Education.
  2. "Cities having population 1 lakh and above" (PDF). censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
  3. Official Language Act 2000 பரணிடப்பட்டது 2015-07-15 at the வந்தவழி இயந்திரம். www.delhi.gov.in. Retrieved 15 July 2015.
  4. Lahiri, Tripti (13 January 2012). "New Delhi: One of History’s Best-Kept Secrets". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/. 
  5. "Capital story: Managing a New Delhi". Hindustan Times. 1 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208125953/http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx. 
  6. Stancati, Margherita (8 December 2011). "New Delhi becomes the capital of Independent India". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/. பார்த்த நாள்: 11 December 2011. 
  7. "Lists: Republic of India". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்.
  8. "The Global Cities Index 2010: Top Global Cities of the World". Foreign Policy. Archived from the original on 18 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "INDIA STATS : Million plus cities in India as per Census 2011". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 11 April 2013.
  10. The Principal Agglomerations of the World – Population Statistics and Maps
  11. "Mercer Survey: New Delhi most expensive Indian city for expats". Mercer. 14 June 2012. http://www.mercer.com/costoflivingpr#City_rankings. பார்த்த நாள்: 14 June 2012. 
  12. "The World According to GaWC 2010". Globalization and World Cities (GaWC) Study Group and Network. Loughborough University. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
  13. "Results Of The Knight Frank Global Cities Survey". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-09-03.
  14. https://books.google.co.uk/books?id=KkpdLnZpm78C&hl=en
  15. Stephen Legg (22 July 2011). Spaces of Colonialism: Delhi's Urban Governmentalities. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-9951-6. பார்க்கப்பட்ட நாள் 2 October 2012.
  16. Wright, Tom (11 November 2011). "Why Delhi? The Move From Calcutta". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/11/why-delhi-the-move-from-calcutta/. பார்த்த நாள்: 16 November 2011. 
  17. Wright, Tom (22 November 2011). "In 1911, Rush to Name Delhi as Capital Causes a Crush". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/22/in-1911-rush-to-name-delhi-as-capital-causes-a-crush/. பார்த்த நாள்: 3 December 2011. 
  18. "Was New Delhi a Death Knell for Calcutta?". The Wall Street Journal. 28 November 2011. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/28/was-new-delhi-a-death-knell-for-calcutta/. பார்த்த நாள்: 3 December 2011. 
  19. Hall, P (2002). Cities of Tomorrow. Blackwell Publishing. pp. 198–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-23252-4.
  20. Coronation park ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14 August 2008.
  21. "Yadgaar" (PDF). தேசிய அருங்காட்சியகம், புது டில்லி. Archived from the original (PDF) on 29 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "Architecture of New Delhi". Apollo (magazine). Archived from the original on 17 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "NDMC Act". Ndmc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.
  24. "Hazard profiles of Indian districts" (PDF). National Capacity Building Project in Disaster Management. UNDP. Archived (PDF) from the original on 19 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 23 August 2006.
  25. New Delhi District : Census 2011 data
  26. "World Weather Information Service – New Delhi". World Meteorological Organisation. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  27. "New Delhi Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 21, 2012.
  28. "Climatological Normals of New Delhi, India". Hong Kong Observatory. Archived from the original on 2011-11-02. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_தில்லி&oldid=4051292" இலிருந்து மீள்விக்கப்பட்டது