முடிசூட்டுப் பூங்கா, தில்லி

முடிசூட்டுப் பூங்கா (Coronation Park) என்பது இந்தியாவின் தில்லியில் நிரங்காரி சரோவர் அருகில் புராரி சாலையில் அமைந்துள்ள பூங்காவாகும். இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1877இல் இங்குதான் தில்லி தர்பார் நடந்தது; ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அப்போது இந்தியாவின் பேரரசியாக பறைசாற்றப்பட்டார். பின்னர் 1903இல் ஏழாம் எட்வர்டு அரசர் வழிமுறையாக அரியணை ஏறியபோதும் தொடர்ந்து ஐந்தாம் ஜோர்ஜ் அரியணை ஏறியபோதும் தில்லி தர்பார் இங்கு நடந்தது. 1911இல் நடந்த தர்பாருக்கு அனைத்து மன்னரரசர்களும் அவைக்கு வந்திருந்தனர். தில்லியின் வரலாற்றை வலியுறுத்தும் வண்ணம் முடிசூட்டுப் பூங்காவின் திறந்தவெளியில் தர்பார் நடத்த முடிவெடுக்கப்பட்டது.[1][2][3]

1911இல் ஐந்தாம் ஜோர்ஜ் அரசரும் மேரி அரசியாரும் அமர்ந்த தில்லி தர்பாரில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுத் தலைநகரத்தை கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றுவதாக அறிவித்ததை நினைவுறுத்தும் சதுரக்கூம்பகத்தூண்
சதுரக்கூம்பகத்தூணின் அடியில் பதிக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் தில்லி தர்பார் நடந்த நாள் திசம்பர் 11, 1911 எனவும் ஐக்கிய இராச்சியத்தில் முடிசூட்டு விழா சூன் 22, 1911இல் நடந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

1960களில் புது தில்லியின் மையத்தில் இந்தியாவின் வாயிலுக்கு எதிராக இருந்த மிகப் பெரிய, உயரமான ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இங்கு இடம்பெயர்க்கப்பட்டது. சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.[1][2][4][5]

அருங்காட்சியகம் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "A monumental delight for Delhiites". தி இந்து. 19 September 2005. Archived from the original on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  2. 2.0 2.1 Charlotte Corey (29 December 2002). "The Delhi Durbar 1903 Revisited". Sunday Times. Archived from the original on 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  3. Lucy Peck (2005). Delhi – A thousand years of Building. New Delhi: Roli Books Pvt Ltd.. பக். 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7436-354-8. https://www.vedamsbooks.com/no43813.htm. பார்த்த நாள்: 2009-06-06. "Though Calcutta was the capital, Delhi's historical significance persuaded the British to hold three Durbars here. The first was the imperial assemblage of 1877, which brought 70,000 people into Delhi, followed by the two coronation durbars of 1902–03 and 1911–12, both attended by even more people and the second by the King and Queen themselves. Each one was held at the same spot on open ground to the north of the Cantonment area. The encampments of all those attending spread for miles. The Viceroy and Governors of the various provinces were camped where Delhi University now stands and a light railway connected them with the Civil Lines in one direction and the Parade Ground and Proclamation dias on the other." 
  4. Jeffrey N. Dupée (2008). Traveling India in the Age of Gandhi. University Press of America. பக். vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7618-3949-1. https://books.google.com/books?id=u6024B6x_eoC&pg=PR7&dq=Coronation+Park+India&lr=&ei=YuQgSt6bGpDOlQTZ_anaCA#PPR8,M1. பார்த்த நாள்: 2009-06-06. 
  5. "Coronation park: legacy of the Raj". Indian Express. 27 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.