முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்தியத் தலைமை ஆளுநர்

பதவி

இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.

தலைமை ஆளுநர்
Flag of the Governor-General of India (1947–1950).svg
'இந்திய தலைமை ஆளுநரின் கொடி'
விளிப்பு முறைஹிஸ் எக்செலன்சி
வசிப்பிடம்வைசிராயின் இல்லம்
நியமிப்பவர்கிழக்கு இந்திய நிறுவனம்
(1858 வரை)
பிரித்தானியப் பேரரசர்
(1858 முதல் 1950 வரை)

கூடுதல் தகவலுக்குதொகு