மவுண்ட்பேட்டன் பிரபு

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.[1]

பர்மாவின் கோமகன் மவுண்ட்பேட்டன்
இந்தியாவின் ஆளுநர்
பதவியில்
மார்ச் 24, 1947 – ஆகஸ்ட் 15 1947
முன்னவர் ஆர்ச்சிபால்ட் வேவல்
பின்வந்தவர் இராசகோபாலாச்சாரி
தனிநபர் தகவல்
பிறப்பு ஜூன் 25, 1900
இங்கிலாந்து
இறப்பு ஆகஸ்ட் 27, 1979
அயர்லாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) எட்வினா மவுண்ட்பேட்டன்
தொழில் ஆங்கிலக் கடற்படைத் தளபதி
சமயம் ஆங்கிலிக்கன்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Louis Mountbatten, 1st Earl Mountbatten

வெளி இணைப்புகள் தொகு