குடியரசுத் தலைவர் இல்லம்

அரண்மனை

குடியரசுத் தலைவர் இல்லம் (இந்தி: राष्ट्रपति भवन, Rashtrapati bhavan) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் ஆகியன உள்ளன.

குடியரசுத் தலைவர் இல்லம்
கிழக்கு முகப்பு
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிDelhi Order[2]
இடம்புது தில்லி, இந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்திரௌபதி முர்மு, இந்தியக் குடியரசுத் தலைவர்
கட்டுமான ஆரம்பம்1912
நிறைவுற்றது1929[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எட்வின் லுட்யென்ஸ்

1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் குடியரசுத் தலைர் இல்லம் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rashtrapati Bhavan". The President of India. பார்க்கப்பட்ட நாள் 2011-12-23.
  2. Kahn, Jeremy (30 December 2007). "Art & Design". Amnesty Plan for Relics of the Raj (Report). The New York Times. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. He also invented his own "Delhi Order" of neo-Classical columns that fuse Greek and Indian elements.

வெளி இணைப்புகள்

தொகு